Doctor Vikatan: ஒருநாளைக்கு எத்தனை முட்டைகள் சாப்பிடலாம், மஞ்சள் கருவைத் தவிர்க்க வேண்டுமா?
பொதுவாகவே, முட்டையில் மஞ்சள் கருவைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்துவோம். மஞ்சள்கருவில் 5 கிராம் அளவு கொழுப்புச்சத்து உள்ளது. ஏற்கெனவே கொலஸ்ட்ரால் பாதிப்புக்குள்ளானவர்கள், இதயம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள், வயதானவர்கள், சாப்பிடும் கொழுப்பை எரிக்க இயலாதவர்கள் போன்றோருக்கு மஞ்சள் கருவால் கொழுப்பு அதிகமாகவும், ஏற்கெனவே உள்ள உடல்நல பாதிப்புகள் மேலும் தீவிரமடையவும் வாய்ப்புகள் அதிகம். ஒருவரது எடைக்கேற்ப அவரது அன்றாட புரதச்சத்து தேவை நிர்ணயிக்கப்படும். உதாரணத்துக்கு, 60 கிலோ எடையுள்ள ஒரு நபருக்கு 60 கிராம் அளவு புரதச்சத்து தேவை. அந்த 60 கிராம்…









