ஐசிசி மகளிர் உலகக் கோப்பை: இந்தியா – ஆஸ்திரேலியா இன்று மோதல் | team india to play with australia in womens odi world cup today
விசாகப்பட்டினம்: ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 3 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி நடப்பு தொடரில் 3 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. தொடக்க ஆட்டத்தில் இலங்கை அணியை 50 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான்…









