கவுரவ தலைவரானார் ஜி.கே.மணி பாமக புதிய தலைவராக அன்புமணி தேர்வு
சென்னை: திருவேற்காட்டில் நேற்று நடைபெற்ற பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், பாமக தலைவராக அன்புமணி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். ஜி.கே.மணி கவுரவ தலைவரானார். அவர்களுக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். பாமக தலைவர் பதவியில் ஜி.கே.மணி 25 ஆண்டுகள் பதவி வகித்து வந்த நிலையில், அவருக்கு பாராட்டு விழா சென்னையில் ராமதாஸ் தலைமையில் நடத்தப்பட்டது. அப்போதே அறிவிப்பு வெளியாகும் என்றும் கட்சியினர் மத்தியில் பேசப்பட்டது. ஆனால் அன்றைய தினம் ஜி.கே.மணி, பாமக சிறப்பு பொதுக்குழுக்கூட்டம் 28ம்தேதி கூட்டப்படும் என்ற…








