கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பிரேமலதாவை செயல் தலைவராக்க கட்சியினர் வலியுறுத்தல்
சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பிரேமலதாவை செயல் தலைவராக்க பல்வேறு மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் துணை பொது செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் மற்றும் 78 மாவட்ட தேமுதிக…








