பாஜ நிர்வாகிகளை தேச துரோக சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. தலைவர் பேட்டி
சென்னை: உலக நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்திய பாஜ நிர்வாகிகளை தேசத்துரோக சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக் கூறியுள்ளார்.சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைமையகத்தில் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று அளித்த பேட்டி:உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்களால், தங்கள் உயிரினும் மேலாக பெரிதும் மதிக்கும் இறைத்தூதர் முகமது நபி (ஸல்) குறித்த பாஜ செய்தி தொடர்பாளர் நுபுர்…









