புறா எச்சம், பராமரிக்கப்படாத ஏ.சி, புகை; நுரையீரலை தற்காத்துக்கொள்ள மருத்துவ ஆலோசனைகள்! I Doctor explains and guides about inflammatory lung condition
சிலருக்கு, ஒவ்வாமை ஏற்படுத்தும் தூசியையோ பறவைகளின் எச்சத்தையோ மிகக் குறைவான அளவில் தொடர்ச்சியாக சுவாசிக்கும் சூழ்நிலை இருக்கும். இவர்களுக்கு நீடித்த நுரையீரல் அழற்சி (Chronic Hypersensitivity Pneumonitis) நோய் உருவாகிவிடலாம். இத்தகைய நிலையை அடைந்து, பின்னர் நுரையீரலில் நாளடைவில் அழற்சி நிலை முற்றி நுரையீரல் சுருக்கம் காண ஆரம்பித்து விடும். இதை Lung Fibrosis என்கிறோம்.Lung fibrosis நிலையை அடைந்தவர்களுக்கு சுவாசப்பாதை சுருங்கி எப்போதும் இருமிக் கொண்டு இருப்பார்கள். போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறல் ஏற்படும்…









