அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகிறார் எடப்பாடி பழனிசாமி : ஜெயலலிதாவுக்கு நிகராக பழனிசாமிக்கு அதிகாரம் வழங்க திட்டம்!!

சென்னை : அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளார் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.வானகரத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பூதாகரமாக வெடித்தது. இக்கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த 23 தீர்மானங்களை பெரும்பாலான…

ENG vs IND : பற்றி எரிந்த பேர்ஸ்டோ நெருப்பு, சுவராய் நிற்கும் புஜாரா – மூன்றாம் நாளின் ஹைலைட்ஸ் | bairstow fireworks pujaras resilience day 3 report of ind vs eng test 5

ஆட்டத்தின் இரண்டாவது நாளிலேயே ஓரளவுக்கு செட்டில் ஆகியிருந்த அவரால் நேற்றைய நாளின் தொடக்கத்தில் 20 என்னும் ஸ்ட்ரைக் ரேட்டைகூட தாண்டியிருக்க முடியவில்லை. இதனால் ‘மூவிங் டே’ என்றழைக்கப்படும் ஆட்டத்தின் மூன்றாம் நாள் ஆட்டம் சற்று சாதாரணமாகவே தொடங்கியது. ஆனால் இந்நிலவரம் அதிக நேரம் நீடிக்கவில்லை. தன் அனல் பறக்கும் ஸ்லெட்ஜிங் மூலம் அவரை விராட் கோலி லேசாக உரசி பேர்ஸ்டோவிற்கு தன் முந்தைய ஞாபகப்படுத்திவிட்டார். ஆம், கடந்த 4 போட்டிகளில் 3 சதங்கள் அடித்திருந்தார் பேர்ஸ்டோ.அதன் பிறகு…

கணக்கு, ஆங்கில பாடங்களை எளிதாக கற்க புதிய செஸ் விளையாட்டைக் கண்டறிந்த தையல் கடைக்காரர்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகணக்கு, ஆங்கில பாடங்களை எளிதாக கற்க புதிய செஸ் விளையாட்டைக் கண்டறிந்த தையல் கடைக்காரர்22 நிமிடங்களுக்கு முன்னர்தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் சிறுவர், சிறுமியர்கள் எளிதாக கணக்கு, ஆங்கில பாடத்தை கற்றுக் கொள்ளும் வகையில் புதிய வகையான செஸ் விளையாட்டை உருவாக்கி அதற்கு காப்புரிமை பெற்று இருக்கிறார் தையல் கடைக்காரர் முருகன்.பள்ளி மாணவர்கள் சதா மொபைல் மற்றும் டிவியில் மூழ்கி பொன்னான நேரத்தை வீணாக்கிக் கொண்டிருப்பதை உணர்ந்து அதற்கு மாற்றாக புதிய வடிவிலான…

பெரியார், அண்ணா, கலைஞர் போட்ட விதைதான் தமிழகம் முன்னணி மாநிலமாக இருக்க காரணம்: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேச்சு

சென்னை: இந்தியாவில் தமிழகம் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னணியில் இருப்பதற்கு காரணம் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் போட்ட விதைதான் என்று சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் அடங்கிய 5 அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ, மாணவிகளுக்காக முப்பரிமாண பகிர்வு மெய்நிகர் கல்வி ஆய்வகத்தின் தொடக்க விழா, வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் கல்லூரியில் நேற்று நடந்தது. அதில்,…

வலிப்பு: யாருக்கு, ஏன், முதலுதவி என்ன? | Visual Story

கூட்டம்பரபரப்பான இடங்களில் பார்த்திருப்போம். கூட்டத்தின் நடுவில் ஒருவர் பொத்தென்று விழுந்து, அவரின் தசைகள் இறுக்கமாகி உடல் முழுவதும் உதறி, வாயிலிருந்து நுரைததும்பி அவருக்கு வலிப்பு வந்திருக்கும்.epilepsyஉலக அளவில் 50 மில்லியன் மக்கள் வலிப்பு நோயினால் (Epilepsy) பாதிக்கப்படுகின்றனர் என்கிறது, உலக சுகாதார நிறுவனம்.மூளைமூளைச் செல்கள் மற்றும் மூளை நரம்புச் செல்களில் ஏற்படும் பாதிப்பின் விளைவாகவே வலிப்பு உண்டாகிறது. ஒரு மனிதனின் வாழ்நாளில் எப்பொழுது வேண்டுமானாலும் வலிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.சில நேரங்களில் இந்த நோய்க்கான காரணத்தை கண்டறிய…

இலங்கை வீராங்கனையை அற்புதமாக ரன் அவுட் செய்த இந்திய விக்கெட் கீப்பர் யாஸ்திகா பாட்டியா | Indian wicket keeper Yastika Bhatia who brilliantly ran out Sri Lankan player

பல்லேகல: இலங்கை வீராங்கனை அனுஷ்கா சஞ்சீவனியை மிக அற்புதமாக ரன் அவுட் செய்து வெளியேற்றினார் இந்திய விக்கெட் கீப்பர் யாஸ்திகா பாட்டியா. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கை நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. தற்போது நடைபெற்று வரும் ஒரு நாள் தொடரில் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில்…

eating fish skin cancer risk study experts

வாரத்திற்கு இரண்டு முறை மீன் சாப்பிடுவதால் தோல் புற்றுநோய்க்கான அபாயம் ஏற்படலாம் என சமீபத்திய ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரவுன் பல்கலைக்கழகத்தின் NIH-AARP டயட் மற்றும் ஹெல்த் ஆய்வின்படி, தினசரி 42.8 கிராம் (வாரத்திற்கு சுமார் 300 கிராம்) மீன்களை உட்கொள்வதால், தோல் புற்றுநோயான மெலனோமாவின் பாதிப்பு 22 சதவீதம் அதிகம் உள்ளது என்று இதில் தெரிவித்துள்ளனர்.சுமார் 4,91,367 அமெரிக்க குடிமக்களை கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வின் அடிப்படையில், புற்றுநோய்க்கான காரணங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த விரிவான…

Tamil News Live | இன்றைய (ஜனவரி 05) டாப் 10 செய்திகள் – News18 Tamil

இதர கட்டுப்பாடுகள் 1) மழலையர் காப்பகங்கள் (Creche) தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools), நர்சரிப் பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை. 2) அனைத்துப் பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது. 3) பொதுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால  நலன் மற்றும் தடுப்பூசி  செலுத்திக்கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்.…

வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு உறுதி பணம் கொடுப்பதாக மீண்டும் சொன்னால் டி.டி.வி.தினகரன் மீது வழக்கு: மாஜி அமைச்சர் கே.பி.முனுசாமி பேட்டி

வேலூர்: வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடப்பது உறுதி. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பணம் கொடுப்பதாக மீண்டும் சொன்னால் டிடிவி.தினகரன் மீது வழக்கு தொடரப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.வேலூரில்  முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நேற்று வேலூர் மத்திய சிறைக்கு சென்று அப்புவை சந்தித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி வரும் 11ம் தேதி நடைபெறும். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக உறுதியாக தேர்வு செய்யப்படுவார். எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுக்கு பணம்…

மாறுகண்… அதிர்ஷ்டமா, ஆரோக்கியக் குறைபாடா? |கண்கள் பத்திரம்-22

”ஸ்குவின்ட் எனப்படும் மாறுகண் இருந்தால் அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கையெல்லாம் அறிவியலுக்குப் புறம்பானது. சிலருக்கு ஒரு கண் மட்டும் மாறுகண்ணாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு இரண்டு கண்களும் மாறுகண்களாக இருக்கலாம். அதற்குப் பெயர் ‘ஆல்ட்டர்நேட்டிவ் ஸ்குவின்ட்’. அதிர்ஷ்டம் என நம்பிக்கொண்டு இந்தப் பிரச்னையை அலட்சியம் செய்தால், மெள்ள மெள்ள குழந்தையின் பார்வையே பறிபோகலாம்” என்ற எச்சரிக்கையோடு ஆரம்பிக்கிறார், சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி. மாறுகண் பாதிப்பு குறித்து அவர் அளிக்கும் விரிவான தகவல்கள்…. சிறப்பு மருத்துவர்…