India to Play Pakistan on August 28 in Asia Cup 2022, டி20 உ.கோப்பைக்கு முன்னாள் இந்தியா-பாகிஸ்தான் போட்டி
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாகவே இலங்கையில் நடைபெறவிருக்கும் ஆசியக் கோப்பை டி20 தொடரில் ஆகஸ்ட் 28ம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் டி20-யில் களம் காண்கின்றன.அக்டோபர்-நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையிலும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்ரன, ஆகவே அதற்கு ஆசியக் கோப்பை டி20யில் ஒரு முன்னோட்டமாக இந்தப் போட்டி அமையவுள்ளது.இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) பிசிசிஐ-யிடம் இருந்து அனுமதி பெற்றுள்ளதாகவும், போட்டிக்கான தகுதிச் சுற்றுகள் ஆகஸ்ட் 21-ஆம் தேதி தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. ஆகஸ்ட் 27-ஆம்…








