தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.38 ஆயிரத்தை கடந்தது
சென்னை: தமிழகத்தில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 22 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.38 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தங்கத்திற்கான இறக்குமதி வரி விதிப்பை ஒன்றியஅரசு கடந்த 1ம் தேதி உயர்த்தியது. வரி விதிக்கப்பட்டது முதல் தொடர்ச்சியாக ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு ரூ.1000 வரை உயர்ந்தது. இந்நிலையில், 21ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4,630க்கும், சவரன் ரூ.37,040க்கும் விற்கப்பட்டது. 22ம் தேதி தங்கம் விலை உயர்ந்தது. 23ம் தேதி ஒரு…









