“ஒன்றிய அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்களை பழிவாங்கவே புலனாய்வு அமைப்புகளை அரசு பயன்படுத்துகிறது’ : முரசொலி காட்டம்!!
சென்னை : சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் ஆகியோர் திட்டமிட்டே பழிவாங்கப்படுகின்றனர் என்று முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது. பழிவாங்கவே அமைப்புகள்? என்ற தலைப்பில் இன்று வெளியாகி உள்ள கட்டுரை : ‘நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது அமலாக்கத் துறை. ’’சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி ஒரு சிலரை அவமானப்படுத்தும் சம்பவம் இது. நிதி மோசடி தடுப்புச் சட்டமானது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது” என்று காங்கிரசுக் கட்சி குற்றம் சாட்டுகிறது.காங்கிரஸ்…









