வர்ணனையிலிருந்து ஓய்வு பெற்றார் இயன் சாப்பல்- இனி நல்ல வர்ணனையை கேட்க முடியுமா?
சுமார் 40 ஆண்டுகளாக கிரிக்கெட் வர்ணனையை கிரிக்கெட்டின் அனைத்து நுட்பங்களுடனும் நுணுக்கங்களுடனும் வர்ணனை அறையிலிருந்து நமக்கெல்லாம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டனும் வர்ணனையாளருமான இயன் சாப்பல் வர்ணனையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.75 டெஸ்ட் போட்டிகளில் ஆடி கேப்டன்சியில் புதியன புகுத்திய இயன் சாப்பல் 5000 ரன்களுக்கும் மேல் அடித்துள்ளார். ஆஸ்திரேலியா அணியை 30 டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தினார். 1980-ல் சேனல் 9-ல் இயன் சாப்பல் கிரேட் ரிச்சி பெனோ, பில் லாரி, டோனி கிரேக்…









