அலி லரிஜானி: ‘இரான் ஆட்சியின் தலைவரை’ கொன்றதாக கூறும் இஸ்ரேல் – என்ன நடக்கிறது?
பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, அலி லரிஜானி17 மார்ச் 2026, 10:28 GMTபுதுப்பிக்கப்பட்டது 38 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்இரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லரிஜானி இஸ்ரேல் நடத்திய ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.லரிஜானி கொல்லப்பட்டாரா அல்லது காயமடைந்தாரா என்பதை இரான் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இதுகுறித்த புதிய தகவல் விரைவில் வெளியிடப்படும் என்று அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இந்த நிலையில் இரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களைக் கட்டுப்படுத்திய நடவடிக்கைகளில்…









