தேவையான பொருட்கள் :
வர மிளகாய் – 15
பூண்டு பல் – 30
சமையல் எண்ணெய் – 2 tbsp
தக்காளி – 3
புளி – சிறு நெல்லிக்காய் அளவு
கல் உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
நல்லெண்ணெய் – 2 tbsp
கடுகு – 1/4 tsp
உளுந்து – 1/4 tsp
கருவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை :
சட்னிக்கு தேவையான அனைத்தையும் தயார் செய்துகொண்டு கடாயை அடுப்பின் மீது வைத்து பற்ற வையுங்கள்.
பின் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாயை சிறு தீயில் வறுத்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
பின் பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின் தக்காளி சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். குழைய வதங்க கல் உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.
ஹெல்தி காலை உணவுக்கு ராகி தோசை தான் பெஸ்ட்… இதோ ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக.!
புளியையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பின் சூடு போக ஆற வைத்து மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
விழுதை ஒரு கிண்ணத்தில் வழித்துக்கொண்டு தாளிக்க கொடுக்கப்பட்டுள்ளவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் மிளகாய் பூண்டு சட்னி தயார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.