இந்திய ஓப்பன் அணியில் கிராண்ட் மாஸ்டர் குகேஷ், கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, கிராண்ட் மாஸ்டர் அர்ஜூன் எரிகைசி, கிராண்ட் மாஸ்டர் விடிட் சந்தோஷ் குஜராத்தி மற்றும் கிராண்ட் மாஸ்டர் ஹரிகிரிஷ்ணா பெண்டலா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்திய பெண்கள் பிரிவில் கிராண்ட் மாஸ்டர் ஹரிக்கா துரோனவல்லி, கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, இண்டர்நேஷனல் மாஸ்டர் திவ்யா தேஷ்முக், இண்டர்நேஷனல் மாஸ்டர் வண்டிகா அகர்வால் மற்றும் இண்டர்நேஷனல் மாஸ்டர் தான்யா சச்தேவ் ஆகியோர் பங்கேற்றனர்.
மிகவும் சிறந்த, செஸ் ஜாம்பவான்கள் நிறைந்த அணிகள் விளையாடிய செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணிகள் தங்கள் ஆதிக்கத்தை முழுமையாக வெளிப்படுத்தினார்கள். இந்திய ஆண்கள் அணி மொத்தம் 11 ஆட்டங்களில் 10 ஆட்டங்களில் வெற்றியும் ஒரு ஆட்டத்தை சமன் செய்தும் 21 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றனர். மேலும், ஆண்கள் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி 17 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், அமெரிக்க அணி 17 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றர். ஆண்கள் அணி ஒரு ரவுண்ட் மீதமுள்ளபோதே தங்கப் பதக்கத்தை உறுதிச்செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பெண்கள் அணி 11 ஆட்டங்களில் 9 வெற்றி, 1 சமன் மற்றும் 1 தோல்வியுடன் 19 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றனர். மேலும், பெண்கள் பிரிவில் கஜகஸ்தான் அணி 18 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், அமெரிக்க அணி 17 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றர்.