chennai is antother own soil of mine says ms dhoni / சென்னை என்னுடைய மற்றொரு தாய் வீடு

Share

திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்வு சென்னை எம்ஆர்சி நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியின் உரிமையாளரும் , இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன தலைவருமான சீனிவாசன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

கிரிக்கெட், டேபிள் டென்னிஸ் , சதுரங்கம் , கால்பந்து , தடகளம் , மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி பந்தயம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் தமிழகத்தை சேர்ந்த வீரர் வீராங்கனைகளுக்கு தோனி விருதுகளை வழங்கினார் .

இதன் பின்னர் பேசிய மகேந்திர சிங் தோனி, மாவட்ட கிரிக்கெட் சங்க கூட்டத்தில் நான் பங்கேற்பது இதுதான் முதன்முறை . சென்னையில் இருந்தபடி எனது ராஞ்சி மாவட்ட கிரிக்கெட் சங்கத்திற்கு நன்றி செலுத்துகிறேன். சென்னையை எனது இன்னொரு வீடாக கருதுகிறேன்.

Also Read : பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து கங்குலி ராஜினாமா? ஜெய் ஷா விளக்கம்

பள்ளியளவிலான கிரிக்கெட் விளையாட்டிலிருதே நான் கிரிக்கெட்டை கற்றுக் கொண்டேன். மாவட்ட அளவிலான போட்டிகள் மூலம் பல வீரர்கள் உருவாகியுள்ளளர். மாவட்டளவிலான போட்டியில் சிறப்பாக விளையாடினால் தேசிய அளவிலான போட்டியில் விளையாட வாயப்பு கிடைக்கும்.

திறமையான வீர்ர்களை உருவாக்குவதில் மாவட்ட கிரிக்கெட் அமைப்புகளுக்கு பொறுப்புகள் அதிகம். கிரிக்கெட்டில் பெண்களின் பங்களிப்பும் அவசியம் இருக்க வேண்டும்.

25 வது விழாவை கொண்டாடும் இந்த சங்கம் , 50 ம் ஆண்டு நிறைவு விழாவையும் கொண்டாட வேண்டும். ரஞ்சி , ஐபிஎல் , இந்திய கிரிக்கெட் அணிக்கான வீரர்களை இந்த அமைப்பு உருவாக்க வேண்டும் என்று மகேந்திர சிங் தோனி கேட்டுக் கொண்டார்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com