இந்த துயரச் சம்பவம் குறித்து தெலங்கானா பா.ஜ.க மாநிலத் தலைவரும் மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டி, “நான் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தேன்.
இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் வேதனையளிக்கின்றன. நான் யாரையும் குற்றம்சாட்டவில்லை. ஆனால் காவல்துறை, நகராட்சி, தீயணைப்பு மற்றும் மின்சாரத் துறைகளைப் பலப்படுத்தப்பட வேண்டும்.
இன்று தீயணைப்பு வீரர்களிடம் ஆரம்பத்தில் உரிய உபகரணங்கள் இல்லை என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இனி வரும் நாட்களில் சிறந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு வர வேண்டும்.
மத்திய அரசு மற்றும் பிரதமருடன் பேசி, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி பெற முயல்வேன்” எனக் கூறியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
அது குறித்து பிரதமர் அலுவலகம், “தெலங்கானாவின் ஹைதராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களை எண்ணி மிகுந்த வேதனை அடைந்துள்ளேன்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் (PMNRF) இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்.
காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்” என எக்ஸ் பதிவில் தெரிவித்திருக்கிறார்கள்.