மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் பதக்கம் வென்று நரிக்குறவர் மாணவர்கள் சாதனை
மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டையில் நரிக்குறவர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் மூலம் நீடு அறக்கட்டளை நிர்வாகத்தின்கீழ் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் கடந்த 1-ஆம் தேதி தமிழ்நாடு குத்துச்சண்டைக் கழகத்தால் தஞ்சாவூரில் நடத்தப்பட்ட மண்டல அளவிலான ஆண்டுப்போட்டியில் சப்-ஜூனியர் பிரிவில் ஒரு தங்கப்பதக்கம் மற்றும் 5 வெள்ளிப் பதக்கங்களை பெற்று மாநில அளவில் விளையாட தகுதி பெற்றனர்.இதைத்தொடர்ந்து, மே 6, 7 மற்றும் 8-ஆம்…









