Browsing: விளையாட்டு

Rohit Sharma; Wankhede Stadium; MCA; மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ரோஹித் சர்மாவின் பெயரில் ஸ்டேண்ட் திறக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று மும்பை வான்கடே மைதானம். இந்த மைதானத்தில், சில ஸ்டேண்டுகளுக்கு சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், வினூ மன்கட், திலீப் வெங்சர்க்கார் ஆகிய முன்னாள் வீரர்களின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.அந்த வரிசையில், இந்திய அணிக்கு 17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையும், 12 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபியும் வென்று கொடுத்த ரோஹித் சர்மாவின் பெயரை, வான்கடே ஸ்டேடியத்தில் ஒரு ஸ்டேண்டுக்கு வைத்து அவரை கௌரவித்திருக்கிறது மும்பை கிரிக்கெட் சங்கம் (MCA).வான்கடே…

மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணியின் கேரள பயணம் ரத்து: நிதி திரட்டுவதில் சிக்கல் | lionel Messi led Argentina football team Kerala tour cancelled

சென்னை: வரும் அக்டோபர் மாதம் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி கேரளாவில் நடைபெறும் சர்வதேச போட்டியில் விளையாடுவதாக இருந்தது. இந்த சூழலில் இதற்கான நிதி திரட்டுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அர்ஜெண்டினா அணியின் பயணம் ரத்து ஆகியுள்ளது. ரூ.30 கோடியை அர்ஜெண்டினா அணியின் வசம் முன்பணமாக கொடுத்து கேரள மாநில அரசு ஒப்பந்தம் செய்ய தவறி உள்ளது. கேரள மாநில அரசும், ஸ்பான்சர்களும் இதற்கு தேவைப்படும் நிதியை திரட்ட முடியாததே அர்ஜெண்டினா அணியின் இந்திய…

Neeraj Chopra : ‘பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் நதீமுடன் நெருங்கிய நட்பு இல்லை!’ – ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா

பாகிஸ்தானை சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமுடன் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா நெருங்கிய நட்பில் இருக்கிறார் என்பது சமூகவலைதளங்களில் சர்ச்சையாகியிருந்தது. அதற்கு நீரஜ் சோப்ரா விளக்கம் அளித்துள்ளார்.Published:Today at 7 PMUpdated:Today at 7 PMNeeraj Chopra & Arshad Nadeem நன்றி

ஷமி மீதான வெறுப்பு ‘ட்ரோல்கள்’- ‘சகோதரத்துவம்’ வலியுறுத்தி கோலி காத்த மனித மாண்பு! | Kohli defends human dignity by emphasizing brotherhood over trolls on shami

2021 டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற போது இந்திய கிரிக்கெட் சந்தித்த அவமானகரமான சம்பவம் விராட் கோலி கட்டிக்காத்த மனித மாண்பினால் ஒன்றுமில்லாமல் அடித்து விரட்டப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. மிகப்பெரிய தோல்வி. பொதுவாக பாகிஸ்தானுடன் தோற்றால் அது இந்திய ரசிகர்களுக்குப் பிடிக்காது. கடும் விமர்சனங்கள் எழுவது காலங்காலமான வழக்கமே. ஆனால் வீரர்கள் மீது வசை பாடுவதும், அவர்களை அவமானப்படுத்துவதும், அவர்களை நாட்டுக்கு…

Kohli: “விராட் கோலி ஓய்வு முடிவுக்கு காரணம் இதுதான்..” – ரவி சாஸ்திரி ஓபன் டாக்

அவர் ஒரு விஷயத்தைச் செய்ய நினைத்தால், 100 சதவிகிதம் தனது அர்ப்பணிப்பைக் கொடுக்க நினைக்கிறார். அதை அத்தனை எளிதாக மீண்டும் நாம் செய்துவிட முடியாது. நிறைய சாதனைகளைப் படைத்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் எந்த கிரிக்கெட் வீரருக்கும் இல்லாத அளவிலான ரசிகர் கூட்டம் விராட் கோலிக்கு இருக்கிறது. ரவி சாஸ்திரிஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் இவர் ஆடும் ஆட்டத்தைப் பார்ப்பதற்கு மக்கள் நேரில் வருகிறார்கள். அந்தளவிற்கு ரசிகர்கள் இவர் மீது அன்பு வைத்திருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார். நன்றி

‘பணமா? பாதுகாப்பா?’ – ஐபிஎல் விளையாடும் ஆஸி. வீரர்களுக்கு மிட்செல் ஜான்சன் அறிவுரை | Money or Security Mitchell Johnson advice to australia players IPL 2025

மும்பை: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசனின் ஆட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் வரும் சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்குகிறது. இந்நிலையில், இதில் பங்கேற்று விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அந்த நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஜான்சன் அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக ஆஸ்திரேலிய நாட்டில் வெளியாகும் நாளிதழ் ஒன்றில் சிறப்பு கட்டுரை ஒன்றை அவர் எழுதியுள்ளார். “ஐபிஎல் சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்களில் விளையாடுவது…

IPL 2025 : 'வேகவேகமாக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்யும் அணிகள்!' – பட்லருக்கு பதில் யார் தெரியுமா?

இந்தியா – பாகிஸ்தான் பதற்ற நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐ.பி.எல் தொடர் நாளை மறுநாள் முதல் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், வரவிருக்கும் போட்டிகளில் ஆட முடியாத சூழலில் இருக்கும் வீரர்களுக்கு பதிலாக வேகவேகமாக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன. IPL 2025’புதிய விதி!’நடப்பு சீசன் ஒரு வார காலம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடங்குவதால் போட்டி அட்டவணையில் நிறைய மாற்றங்கள் இருக்கிறது. இதனால் ஒரு சில வெளிநாட்டு வீரர்களால் எஞ்சியிருக்கும் போட்டிகளில் அல்லது ப்ளே ஆப்ஸ் போட்டிகளில் ஆட…

‘சியர் லீடர்ஸ், டிஜே வேண்டாம்’ – கவாஸ்கர் வலியுறுத்தல் மீது பிசிசிஐ பரிசீலனை? | sunil gavaskar says no cheerleaders dj in ipl 2025 bcci considers

மும்பை: நடப்பு ஐபிஎல் 2025-ம் ஆண்டுக்கான சீசனில் எஞ்சியுள்ள போட்டிகளில் சியர் லீடர்ஸ் மற்றும் டிஜே போன்ற கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். அதை பிசிசிஐ பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது நடப்பு சீசனுக்கான ஐபிஎல் போட்டிகள். இந்நிலையில், போர் நிறுத்த அறிவிப்பின் எதிரொலியாக, வரும் சனிக்கிழமை (மே 17) முதல் எஞ்சியுள்ள…

CSK; MI; Ayush Mhatre; சென்னை அணி தன்னை எப்படி எடுத்தது, அதை முதலில் தனக்கு யார் சொன்னது என்பது பற்றி ஆயுஷ் மாத்ரே பகிர்ந்திருக்கிறார்.

ஐபிஎல் தொடர் மே 17-ம் தேதி மீண்டும் தொடங்கவிருக்கிறது. இதில், சி.எஸ்.கே அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மிச்சமிருந்தாலும், பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்டது.இருப்பினும், அடுத்த சீசனுக்கான வீரர்களைக் கண்டெடுக்கும் வகையில் சென்னை அணி கடந்த ஐந்து போட்டிகளாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறது.அவ்வாறு, ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்று வீரராக தொடரின் பாதியில் எடுக்கப்பட்ட 17 வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே, சென்னை அணிக்கு பெரும் நம்பிக்கையளிக்கும் வகையில் ஆடிவருகிறார்.சூர்யகுமார் யாதவ் -…

‘கேப்டன் பொறுப்புக்கு பும்ரா தகுதியானவர்’ – அஸ்வின் ‘டிக்’ செய்வது ஏன்? | ashwin backs bumrah for team india test captaincy role

சென்னை: அடுத்த மாதம் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றுள்ள நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், கேப்டன் பொறுப்புக்கு பும்ராவை ஆதரித்துள்ளார் அஸ்வின். “இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய அணி முற்றிலும் புதிய அணியாக இருக்கும். பல்வேறு மாற்றங்களை கொண்டுள்ள அணியில் இடம்பெறுகின்ற அனுபவ வீரர்களில் ஒருவராக பும்ரா இருப்பார்.…

1 38 39 40 41 42 358