பிரெஞ்சு ஓபன் இன்று தொடக்கம்! | french open 2025 tennis grand slam tournament begins today
பாரிஸ்: கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இன்று தொடங்குகிறது. வரும் ஜூன் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் பட்டம் வெல்வதற்கு உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் மல்லுக்கட்ட உள்ளனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. 22 வயதான அல்கராஸ் இந்த ஆண்டில் களிமண் தரை ஆடுகளத்தில் நடைபெற்றுள்ள 16 ஆட்டங்களில் 15-ல் வெற்றி…