Champions League: பரபரப்பான முதல் லெக் அரையிறுதி, மான்-சிட்டி முன்னிலை!
எடிஹாட் ஸ்டேடியத்தில் நடந்த மான்செஸ்டர் சிட்டி, ரியல் மாட்ரிட் அணிகள் மோதிய சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிப் போட்டியில் மொத்தம் 7 கோல்கள் அடிக்கப்பட்டன. தொடர்ந்து அட்டாக்கில் ஈடுபட்டுக்கொண்டே இருந்த மான்செஸ்டர் சிட்டி இந்த முதல் லெக் போட்டியை 4-3 என்று வென்றிருக்கிறது. அத்லெடிகோ மாட்ரிட் அணிக்கெதிரான காலிறுதியின் 2 சுற்றுகளில் சேர்ந்தே மான்செஸ்டர் சிட்டியால் 1 கோல் தான் அடிக்க முடிந்திருந்தது. ஆனால், ரியல் மாட்ரிட் அணிக்கெதிராக 90 நொடிகளிலேயே முதல் கோலை அடித்தது அந்த அணி.…

