காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பதவி விலகல்?: புதிய முதல்வரை தேர்வு செய்ய இன்றிரவு எம்எல்ஏக்கள் கூட்டம்
ெஜய்ப்பூர்: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுவதால், அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் இன்றிரவு புதிய முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக எம்எல்ஏக்களின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட உள்ளதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்…









