இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு வரும் 26ம்தேதி வாக்குப்பதிவு: ஒருமனதாக தேர்வாகிறார் எடப்பாடி பழனிசாமி; ஓபிஎஸ் தரப்பு கடும் அதிர்ச்சி
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதன்படி இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கி வரும் 26ம்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அன்றைய தினம் ஒருமனதாக எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக தேர்வாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக பல பிரிவாக அதிமுக பிளவுபட்டுள்ளது. இதனால், அதிமுக யாருக்கு சொந்தம் என ஓ.பன்னீர்செல்வம்…