Browsing: அரசியல்

இந்தி மொழி திணிப்பின் மூலம் ஒன்றிய அரசு தாய்மொழி உரிமையை அழிக்கிறது: முத்தரசன் கண்டனம்

சென்னை: இந்தி மொழி திணிப்பின் மூலம் மாநில மக்களின் தாய்மொழி உரிமையை அழிக்க நினைக்கிறது ஒன்றிய அரசு என முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசியல் சாசனத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் அனைத்தும் ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக ஏற்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மாநில மக்களால் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதனை நிராகரித்து ‘இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதை கைவிட…

மொழி திணிப்பால் சோவியத் யூனியன் வீழ்ந்த நிலைதான் ஏற்படும்: ஒன்றிய அரசுக்கு வைகோ எச்சரிக்கை

சென்னை: மொழி திணிப்பால், சோவியத் யூனியன் வீழ்ந்த நிலைதான் இந்தியாவிலும் ஏற்படும் என்று ஒன்றிய அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் சம வாய்ப்பு, சம உரிமை வழங்கி, நாட்டின் ஆட்சி மொழி மற்றும் அலுவல் மொழிகள் ஆக்கிட வேண்டும். அப்போதுதான் நாட்டின் ஒருமைப்பாடு நிலைக்கும். இல்லையெனில் மொழித்…

சொல்லிட்டாங்க…

* கர்நாடகாவில் முதல்வர் பதவி ரூ.2,500 கோடிக்கு ஏலம் போவதாக, பாஜவை சேர்ந்த மூத்த எம்எல்ஏ தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.* இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாட்டை வரவேற்கிறோம். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ* இந்தி மொழித் திணிப்பால் சோவியத் யூனியன் வீழ்ந்த நிலைதான் இந்தியாவிலும் ஏற்படும். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ* தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும் எதிராக செயல்படுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.…

அலுவல் ஆய்வுக்குழுவில் ஆர்.பி.உதயகுமாரை அனுமதிக்க வேண்டும்: சட்டப்பேரவை செயலாளருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்..!

சென்னை: எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்க கோரி சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கையை வலிறுத்தி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே கடும் மோதல் நடந்து வருகிறது. ஒற்றை தலைமை தொடர்பான பிரச்சனை தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அதிமுக சம்மந்தப்பட்ட சட்டமன்ற குழுக்களை மாற்றுவது தொடர்பாக மனுக்கள் வந்தால் நிராகரிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே கூறியிருந்தார். இதனிடையே எடப்பாடி பழனிசாமி…

விசிக, இடதுசாரிகள் சார்பாக இன்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்

சென்னை: விசிக, இடதுசாரிகள் சார்பாக இன்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் பங்கேற்கின்றன. மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க திமுக தொண்டர்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். Source link

பாரதிய ஜனதா பரப்பி வரும் வெறுப்புக்கும், கோபத்துக்கும் எதிரானது தான் தனது ஒற்றுமை நடைபயணம்: ராகுல்காந்தி பேச்சு

பெங்களூரு: பாரதிய ஜனதா பரப்பி வரும் வெறுப்புக்கும், வன்முறைக்கும், கோபத்துக்கும் எதிரானது தான் தனது ஒற்றுமை நடைபயணம் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தியில் சித்ரதுர்கா மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி, திரியூர் என்ற இடத்தில் பொதுக்கூட்டத்தில் பேசினார். அதில் தனது போர் வெறுப்புக்கும், அன்புக்கும் இடையேயானது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியா உடைக்கப்பட்டுவிட கூடாது. இந்தியா ஒற்றுமையுடனே இருக்கும் என்பதே பாரதிய ஜனதாவுக்கு தனது பயணம் அளிக்கும் செய்தி என்று ராகுல்காந்தி குறிப்பிட்டார். நாட்டிலேயே கர்நாட…

சொல்லிட்டாங்க…

* நம் நாட்டையும், நம் இளைஞர்களையும் அழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ள நகர்ப்புற நக்சல்களை அனுமதிக்கக் கூடாது. பிரதமர் மோடி*நாடாளுமன்ற தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமின்றி, மக்களுக்கு பல்வேறு பயனுள்ள திட்டங்களையும் பாஜ செயல்படுத்தி வருகிறது. ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்* மதத்தை வைத்து அரசியல் செய்யும் பாஜவால்தான் இந்தியாவுக்கு தலைகுனிவு. இதற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும். – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி* இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பில் மூர்க்கத்தனமாக ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. மொழி…

மரம் நடும் இயக்கம் சார்பில் 17,768 மரங்கள் நடப்பட்டுள்ளது: பாமக அறிவிப்பு

சென்னை: பாமக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், மரம் நடும் அறமே மாபெரும் அறம் இயக்கத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த ஆண்டு தொடங்கினார். அதன்படி 251 நாட்களில் 2304 பேர் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். மொத்தம் 17768 மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இந்த இயக்கம் தொடங்கி ஓராண்டை நிறைவு செய்வதற்குள் பிறந்தநாள், திருமண நாள் உள்ளிட்ட நிகழ்வுகளையொட்டி நடப்பட்ட மரக்கன்றுகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடக்கும். Source link

சென்னையில் அதிமுக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னையில் அதிமுக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் கூட்டம் நடைபெறுகிறது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் 61 ஆதரவு எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர். 17ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. Source link

சாதியும் வர்ணமும் மறந்துவிடக் கூடியவை அல்ல அழித்தொழிக்கப்பட வேண்டியவை: திருமாவளவன் கருத்து

சென்னை: சாதியும் வர்ணமும் மறந்துவிடக் கூடியவை அல்ல, அழித்தொழிக்கப்பட வேண்டியவை என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூற்றுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் ‘சாதி, வர்ணம் என்பவையொல்லம் இறந்தகால விவகாரங்கள் என்றும், அவற்றை மறந்துவிட்டு கடந்து செல்வோமென்றும் அண்மையில் கூறியிருக்கிறார். அவர் கூறுவது மிகப்பெரிய நகைப்புக்குரிய கேலிக்கூத்தாக உள்ளது. இதைவிட ஒரு நாடக அரசியல் வேறேதுமில்லை என்பதாக உள்ளது. இந்திய சமூகம்…

1 81 82 83 84 85 161