Browsing: அரசியல்

ஈபிஎஸ் அளித்த கடிதம் மீது சபாநாயகர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

மதுரை ஈபிஎஸ் அளித்த கடிதம் மீது சபாநாயகர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை எதிர்க்கட்சி என்ற முறையில் பேரவையில் பேசுவோம் என மதுரையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி தெரிவித்தார். Source link

திமுக தலைவராக தேர்வு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கே.எஸ்.அழகிரி, ஜவாஹிருல்லா வாழ்த்து

சென்னை: திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள்  எம்.கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வபெருந்தகை மற்றும் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல், மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ தலைமையில் பொது செயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ, துணை பொது செயலாளர் தாம்பரம் யாகூப், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற…

சொல்லிட்டாங்க…

* நாட்டில் எந்தவித ஒற்றுமையும் இன்றி, அணு ஆயுதங்களை வைத்திருக்கும் பாகிஸ்தான் தான் உலகின் மிக ஆபத்தான நாடு. – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்* காலாவதியான சட்டங்கள், மோசமான பழக்க வழக்கங்கள் நம் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும்.- பிரதமர் நரேந்திர மோடி* கோவிட் காலத்தில் பிரதமரின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொள்கைகளால் 12.5 கோடி பேர் வேலையில்லாமல் உள்ளனர். – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* அரசு பள்ளியை மேம்படுத்த தனியார் நிறுவன வல்லுனர்களை நியமிக்கும்…

தேவர் தங்கக்கவசம் எடுக்கும் விவகாரம் எடப்பாடி ஆதரவு மாஜி அமைச்சர்கள் நடத்திய பேச்சு தோல்வி: அரசு முடிவுக்கு ஒத்துழைப்பதாக பொறுப்பாளர் தகவல்

சாயல்குடி: குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அணிவிக்கும் தங்கக்கவசத்தை வங்கியிலிருந்து எடுக்கும் விவகாரம் தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நினைவிட பொறுப்பாளரிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. கடந்த 2014ம் ஆண்டு அதிமுக சார்பில் ரூ.4.5 கோடி மதிப்பிலான 13.5 கிலோ எடையுள்ள தங்கக்கவசம், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அணிவிக்கப்பட்டது. இந்த தங்கக்கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள ஒரு வங்கியில் வைத்து…

தமிழகத்தில் ஒன்றிய அமைச்சர்களின் ஆய்வு ஆரோக்கியமானதல்ல: கே.பி.முனுசாமி கருத்து

கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ஒன்றிய அரசின் திட்டப்பணிகளை ஒன்றிய அமைச்சர்கள் ஆய்வு மேற்கொள்வது ஆரேக்கியமானது அல்ல என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள நியாய விலைக்கடையின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று கடையை திறந்து வைத்த கே.பி.முனுசாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; ஒன்றிய அரசும் மாநில அரசும் இணக்கமாக செயல்படுவதன் மூலமாகவே இறையாண்மையை காக்க முடியும் என்று கூறினார். தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டு காலமாக…

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா: திமுக எம்பிக்கள் பங்கேற்பு

அம்பத்தூர்: திமுக தலைவராக இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், சென்னை கிழக்கு மாவட்டம் வில்லிவாக்கம் மேற்கு பகுதி திமுக சார்பில், வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில் ‘சமூக நீதி தத்துவம் சாதிக்கும் சரித்திரம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. வில்லிவாக்கம் மேற்கு பகுதி செயலாளரும் சென்னை மாநகராட்சி 8வது மண்டல குழு தலைவருமான கூ.பீ.ஜெயின் தலைமை வகித்தார். சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு,…

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் மல்லிகார்ஜூன கார்கே சென்னையில் வாக்கு சேகரித்தார்: தமிழக காங்கிரஸ் தலைமை சார்பில் பிரமாண்ட வரவேற்பு

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும், மல்லிகார்ஜூன கார்கே நேற்று சென்னையில் வாக்கு சேகரித்தார். அவருக்கு, தமிழக காங்கிரஸ் தலைமை சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் மல்லிகார்ஜுன கார்கேவும், நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூரும் நேரடியாக களம் காண்கின்றனர். கடந்த வாரம் சென்னை வந்த…

சொல்லிட்டாங்க…

* நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியர் இரட்டைக் குழந்தைக்காக எந்த மருத்துவமனையை அணுகினர் என்பதை மருத்துவத்துறை கண்டறிந்துள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன்.* பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்குவதை இலகுவாக்கவும், சிக்கல்களை ஆய்வு செய்ய ஆணையம் அமைத்திடவும் வேண்டும். விசிக தலைவர் திருமாவளவன்.* இந்தி பேசாத மக்களுக்கு பிரதமர் நேரு கொடுத்த உறுதிமொழியை போன்று இப்போது பிரதமர் மோடியிடம் அத்தகைய உறுதிமொழியை பெற அண்ணாமலைக்கு துணிவு இருக்கிறதா? தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. * ஒருதலைக் காதல் கொலைகளை…

சென்னையில் 7 நிமிடங்களில் நோயாளியை சென்றடைகிறது 108 அவசர ஊர்தி: அன்புமணி பாராட்டு

சென்னை: பாமக தலைவர் அன்புமணி டிவிட்டரில் கூறியுள்ளதாவது: சென்னையில் 108 அவசர ஊர்திகள், அழைக்கப்பட்ட நேரத்திலிருந்து நோயாளிகளை சென்றடையும் சராசரி நேரம் 7 நிமிடமாக குறைந்துள்ளது. அதாவது, ஒருவர் சேவை கோரி அழைத்தவுடன் புறப்படும் அவசர ஊர்தி சராசரியாக அடுத்த 7 நிமிடங்களில் நோயாளியை சென்றடைகிறது. இது பாராட்டத்தக்கது. நோயாளிகள், விபத்துகளில் சிக்கியவர்களின் உயிரைக் காக்க உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம். அதற்காகத் தான் எனது பதவிக் காலத்தில் 108 சேவையை தொடங்கினேன். சென்னையில் அவசர ஊர்தி…

அரசியல் கோமாளி எடப்பாடி பழனிசாமி: புகழேந்தி விமர்சனம்

சேலம்: அரசியல் கோமாளி எடப்பாடி பழனிசாமி; அதிமுக-வை ஓபிஎஸ் மட்டுமே வளர்க்க முடியும் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். சேலம் எடப்பாடி பழனிசாமி கோட்டை என்பது தற்போது ஓட்டையாக உள்ளது. பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு செல்ல பழனிசாமி-க்கு தகுதி இல்லை. ஓபிஎஸ் க்கு மட்டும் தான் தகுதி உள்ளது. தென்தமிழகத்திற்கு செல்ல பழனிசாமி-க்கு பயம். பிரதமர் பாதுகாப்பில் ஒளிந்து கொண்டு பசும்பொன் செல்ல நினைக்கிறார். பழனிசாமி பொதுச் செயலாளர் ஆக முடியாது எனவும் கூறினார். Source…

1 79 80 81 82 83 161