Browsing: அரசியல்

ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்.. கோவிந்தசாமி நகர் மக்களுக்கு மயிலாப்பூர், மந்தைவெளியில் வீடுகள் : முதல்வர் அறிவிப்பு!!

சென்னை: சென்னை ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்த கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர் இளங்கோவன் தெருவில் நீர் நிலைப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ள வீடுகளை கடந்த 29ம் தேதி முதல் நீதிமன்றம் உத்தரவுப்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தி வருகின்றனர். அதன்படி, நேற்று அதிகாரிகள் குடியிருப்புகளை இடிக்க முயன்றபோது, அதே பகுதியில் 30 ஆண்டுகளாக வசித்து வரும் வி.ஜி.கண்ணையன்(57) என்பவர் உடலில்…

எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல்

சென்னை :எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் . எம்ஜிஆர் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. Source link

மோடி பிரதமர் ஆன பின் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடக்கவில்லை: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி

தென்தாமரைகுளம்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் நேற்று குமரி மாவட்டம் வந்தார். தென்தாமரைக்குளத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி: ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான, குடிநீரை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. விவசாயிகளுக்கு சன்மான நிதி வழங்கியுள்ளோம். 2014க்கு முன் விவசாயிகள் தற்கொலை என்பது அன்றாட நிகழ்வாக இருந்தது. அதன்பிறகு அது போன்ற சம்பவமே நிகழ்வதில்லை. காங்கிரஸ் ஆட்சியில் தினந்தோறும் மீனவர் படுகொலை நடைபெற்றது. 600 க்கு மேற்பட்ட துப்பாக்கிச்சூடு நடந்தது.…

தமிழக அரசின் செயல்பாடுகளை குறைகூறுவதற்காகவே அண்ணாமலையை தலைவராக பாஜ தலைமை நியமித்துள்ளது: துரை வைகோ பரபரப்பு பேச்சு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், பழைய பஸ் நிலையம் அருகே மதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில், மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கலந்துகொண்டார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் 50 சதவீதம் நிலக்கரியை கொண்டுதான் மின்சாரம் தயாரிக்க முடியும். கடந்த ஆண்டு நிலக்கரி இறக்குமதியில் ஒன்றிய அரசு பல்வேறு தடைகளை கொண்டு வந்தது. இதையடுத்து, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து மின்சாரம் தயாரித்தனர். தற்போது கோடைகாலத்தில் 30 சதவீதம் அதிகமாக மின்சாரம்…

பெரிய திட்டங்களை நிறைவேற்றினோம்: எடப்பாடி பேட்டி

சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் பெரிய அளவிலான திட்டங்களை நிறைவேற்றி காட்டினோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்த ஓராண்டு ஆட்சியில் எந்த புதிய திட்டமும் அறிவிக்கப்பட்டவில்லை. அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதை தடுக்க ஒரு திட்டத்தை தீட்டி பிரதமரிடம் வழங்கியதன் அடிப்படையில் நடந்தாய் வாழி என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. குடிமராமத்து என்ற…

சொல்லிட்டாங்க…

* நாட்டில் தற்போது கடுமையான பண வீக்கம், வேலையின்மை, மோசமான நிர்வாகத்திற்கு எதிராக கோடிக்கணக்கான குடும்பங்கள் போராடி வருகிறார்கள். – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* பெட்ரோல், டீசல், காஸ் போன்றவற்றின் விலையை உயர்த்தி வருவதன் மூலம் ஒன்றிய அரசு மக்களை வஞ்சித்து வருகிறது. – மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி* உயிரிழந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்பதால் கொரோனா உயிரிழப்பை ஒன்றிய அரசு மறைக்கிறது. – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி*…

பத்தாண்டு சாதனைகளை ஒராண்டில் நிகழ்த்தியுள்ளார்: தலைவர்கள் வாழ்த்து

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், பத்தாண்டு சாதனைகளை ஒராண்டில் நிகழ்த்தியுள்ளார் என அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கி.வீரமணி ( திராவிடர் கழகத் தலைவர்): ‘திராவிட  மாடல் ஆட்சி’யின் அடிப்படை உரிமைகளில் முதன்மையானது மாநில உரிமை. இதனை  நிலைநிறுத்துவதற்காக தயக்கமின்றி ஒன்றிய அரசை எதிர்த்து உரிமைக் குரல் எழுப்புகின்றார் நம் முதல்வர். பதவிக்கு வந்த பிறகு ஒன்றிய அரசுக்கு பல்லக்கு தூக்கும் முந்தைய ஆட்சியாளர்களைப் போல் இல்லாமல்…

சென்னை விமான நிலையத்திற்கு காமராஜர், அண்ணா பெயரை மீண்டும் சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களுக்கு சூட்டப்பட்டிருந்த பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா பெயர்களும், பெயர் பலகைகளும் அகற்றப்பட்டு பத்தாண்டுகள் ஆகப்போகும் நிலையில், அவற்றை மீண்டும் அமைப்பதற்கு விமான நிலையங்கள் ஆணையம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, மீண்டும் பழைய பெயர்கள் சூட்டப்படுவதை விமான நிலையங்கள் ஆணையம் விழா நடத்தி அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். Source link

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கக் கூட்டங்கள் நாளை முதல் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கக் கூட்டங்கள் நாளை முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் மே 22ம் தேதி வரை கூட்டங்கள் நடைபெறுகிறது Source link

10 ஆண்டு சாதனைகளை ஓரே ஆண்டில் நிகழ்த்தியுள்ளது திமுக அரசு: கே.எஸ்.அழகிரி வாழ்த்து

சென்னை: 10 ஆண்டு சாதனைகளை ஓரே ஆண்டில் திமுக அரசு நிகழ்த்தி காட்டியுள்ளது. தலை நிமிர்ந்த தமிழகமாக மாற்றுகிற முயற்சியில் வெற்றி பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்துகிறேன் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளர். Source link

1 154 155 156 157 158 161