Browsing: அரசியல்

ஓராண்டில் கட்சி நன்கொடை பாஜவுக்கு ரூ.477 கோடி காங்கிரசுக்கு ரூ.74 கோடி

புதுடெல்லி: கடந்த 2020-21 நிதியாண்டில் பாஜ ரூ.477.5 கோடியும், காங்கிரஸ் ரூ.74.50 கோடியும் நன்கொடையாகப் பெற்றுள்ளது. தேர்தல் சட்ட விதிகளின்படி, நாட்டில் உள்ள தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் ரூ.20,000க்கு மேல் பெற்ற நன்கொடைகள் குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, 2020-21ம் நிதியாண்டுக்கான நன்கொடை விவரங்களை பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘பல்வேறு நிறுவனங்கள், தேர்தல்…

பாமக செயலாளர்கள் இருவர் பதவி பறிப்பு: அன்புமணி ராமதாஸ் அதிரடி

சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  சென்னை மந்தைவெளியை சேர்ந்த ர.ஸ்ரீராம் ஐயர் என்பவர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், கட்சியின் நலன் கருதி இவர் வகித்து வந்த தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் ஒப்புதோடு இன்று முதல் விடுவிக்கப்படுகிறார். இனி இவர் கட்சியில் உறுப்பினராக மட்டுமே இருப்பார். அதேபோன்று, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த வெங்கடேச பெருமாள் என்பவர், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் கட்சியின்…

மாநிலங்களவை தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு; திமுக, அதிமுக, காங். வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகிறார்கள்: 3ம் தேதி மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்..!

சென்னை: தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஸ்குமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29ல்  முடிவடைகிறது. இதையடுத்து, 6 மாநிலங்களவை எம்பிக்களை தேர்ந்தெடுக்க ஜூன் 10ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் கடந்த 24ம் தேதி முதல் இன்று (31ம் தேதி) வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மாநிலங்களவை எம்பிக்களை அந்தந்த மாநில எம்எல்ஏக்களே வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு…

நூல் விலை உயர்வால் ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் விசைத்தறி, கைத்தறி இயங்காததால் அன்னிய செலாவணி பாதிப்பு: எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை:சென்னை தலைமை செயலகத்தில் மாநிலங்களவை எம்பி பதவிக்கு அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் நிருபர்களிடம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: திமுக ஆட்சியில் ஓராண்டு காலம் ஆகியும், எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை அதிகளவில் உள்ளது. டிஜிபி, கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த ஆபரேஷன் 2.0 என அறிவிக்கிறார். சுகாதாரத்துறை அமைச்சர் 102 டன் கஞ்சா பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.…

பழங்குடியினர் பிரிவில் படுகர் இன மக்களை சேர்க்க நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: படுகர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். 1931ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, படுகர் இன மக்கள் பழங்குடியின மக்களாக வகைப்படுத்தப்பட்டார்கள். படுகர் இன மக்கள் அளித்துள்ள ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்…

சொல்லிட்டாங்க…

இந்த நாடு லஞ்சம், ஆயிரக்கணக்கான கோடி ஊழல் உள்ளிட்ட 2014ம் ஆண்டுக்கு முன் சிக்கிய தீய சுழற்சியில் இருந்து விடுபட்டு வெளியே வந்துள்ளது.- பிரதமர் மோடிதேசிய கல்விக்கொள்கையில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. மேலோட்டமாக படித்துவிட்டு தேசிய கல்விக்கொள்கை எதிர்க்கப்படுகிறது.- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிபாமக 2.0வில் என்ன செய்யப்போறோம் என்பதை தற்போதைக்கு சொல்லமாட்டேன். ஏன் என்றால், மாற்று கட்சியினர் காப்பி அடித்துவிடுகின்றனர். – பாமக தலைவர் அன்புமணிகாங்கிரசில் 18 ஆண்டுகளாகியும் மாநிலங்களவையில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனக்கு தகுதி…

பெட்ரோல், டீசல் விலையை 16 முறை ஏற்றி, 2 முறை குறைத்த மோடி: முத்தரசன் காட்டம்

திருச்சி: பாஜக பொறுப்பேற்ற 8 ஆண்டுகளில் மதச்சார்பற்ற கொள்கை சீர்குலைந்த நிலையில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலையை 16 முறை ஏற்றி 2 முறை மட்டுமே மோடி அரசு குறைத்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். திருச்சியில் அவர் அளித்த பேட்டி: ஒன்றிய பாஜ அரசால் சிறுபான்மை மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய அவலநிலை உள்ளது. கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ள ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படாமல், அதேநேரம்…

மாநிலங்களவை தேர்தல் : அதிமுக வேட்பாளர்கள் சி.வி. சண்முகம், ஆர்.தர்மர் ஆகியோர் வேட்பு மனுதாக்கல்!!

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இந்தியா முழுவதும் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, மத்திய பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை பதவியிடங்களை நிரப்ப இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.அதில் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட திமுக உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், அதிமுக உறுப்பினர்கள் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகியோரின் பதவிகளும்…

காங்கிரஸ் தலைமை, உறுப்பினர்கள், நண்பர்களின் ஆதரவு, வாழ்த்துக்கு நன்றி : ப. சிதம்பரம்

சென்னை :  தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ப.சிதம்பரம் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். இது குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,’ தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபாவுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக இன்று மதியம் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறேன்;காங்கிரஸ் தலைவர், காங்கிரஸ் தலைமை, உறுப்பினர்கள், நண்பர்களின் ஆதரவு மற்றும் வாழ்த்துக்கு நன்றி,’ எனத் தெரிவித்துள்ளார். Source…

திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்: இன்று நடக்கிறது

திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் திமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று (30ம் தேதி) மாலை 4 மணியளவில் திருத்தணி – அரக்கோணம் நெடுஞ்சாலையில் உள்ள என்.எஸ்.கே.டவரில் என்னுடைய தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி எஸ்.சந்திரன், மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆர்.டி.இ.ஆதிசேசன், ஒ.ஏ.நாகலிங்கம், கே.திராவிடபக்தன், எஸ்.கே.ஆதாம், மா.ராகு, சரஸ்வதி சந்திரசேகர், இ.கே.உதயசூரியன், பி.ரவீந்திரநாத், கே.யு.சிவசங்கரி,…

1 144 145 146 147 148 161