‘2026 சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்’- எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது. திமுகவால் மக்களுக்கு நன்மை இல்லை. திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்திற்கு கொடுத்த இழப்பீடு ஏற்புடையதல்ல என செய்தி வெளியாகி இருக்கிறது. 2024-ம் ஆண்டு சங்கரன்கோவிலில் காவலில் இறந்த முருகனின் மனைவிற்கு இழப்பீடு இல்லை. எடப்பாடி பழனிசாமி – அமித்ஷாஅரசு வேலை வழங்க கோர்ட்டு உத்தரவிட்டும் திமுக அரசு தரவில்லை என செய்திகளில் கூறப்படுகிறது. லாக்கப் மரணங்களை தடுக்க முடியவில்லை. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இழப்பீடு தர மனமில்லை. மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதைவிட…









