நீலகிரி: சிறுத்தைகளைக் காவு வாங்கும் சுருக்கு கம்பிகள்; என்ன செய்யப்போகிறது வனத்துறை?
வனங்கள் நிறைந்த நீலகிரியில் வனத்திற்கு எதிரான குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.அண்டை மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகளைப் போல் ஊடுருவி வனவிலங்குகளை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தும் வேட்டை கும்பல் ஒருபுறம் என்றால், நாட்டு வெடி மற்றும் சுருக்கு வலை கம்பிகள் மூலம் முயல், காட்டுப்பன்றி, கடமான்களை வீழ்த்தும் உள்ளூர் கும்பல் மறுபுறம் எனப் போட்டிப்போட்டு வனவிலங்குகளை அழித்து வருகின்றனர்.சுருக்கில் சிக்கி உயிரிழந்த சிறுத்தைதேயிலைத் தோட்டங்களில் வைக்கப்படும் சுருக்கு வலை கம்பிகளில் புலி, சிறுத்தை போன்ற விலங்கினங்கள் சிக்கி பரிதாபமாக…









