இன்றைக்கு கிடைப்பதைப் போல சிப்ஸ், பப்ஸ் உள்ளிட்ட பேக்கரி நொறுக்கு தீனிகளை அன்றைக்கு யாரும் கண்ணால் கூட கண்டிருக்க மாட்டார்கள். அவர்களுக்கு கிடைத்ததெல்லாம் எந்த செலவும் இன்றி இயற்கையாக கிடைத்த நாவல்பழம், புளியம்பழம், இலந்தைப் பழம், முந்திரிப் பழம் போன்ற தீனிகள் தான்.
குறிப்பாக, சாலையின் இரு மடங்கிலும் புளிய மரங்கள் அணிவகுத்து நிற்கும் என்பதால் புளியங்காய்களுக்கு பஞ்சமில்லை. ஆனால், இங்குதான் ஒரு டிவிஸ்ட் இருக்கிறது. பொதுவாக புளியின் சுவை புளிப்புதான் என்று பரவலாக நினைத்திருப்போம். ஆனால், ஒருசில மரத்துப் புளி லேசாக இனிப்புச் சுவை கொண்டிருக்கும். அந்த மரத்தை சுற்றி எந்த நேரமும் சிறுவர், சிறுமிகள் வட்டமடித்து வருவார்கள். புளியங்காயை லேசாக கடித்தாலே பல் கூசும் அளவுக்கு புளிக்கும். அதனால் என்ன? லேசாக உப்பு, மிளகு தூள் போன்றவற்றை சேர்த்து சாப்பிட்டால் டேஸ்ட் தூக்கலாக இருக்கும்.

புளியும், இந்திய கலாச்சாரமும்
பல நூற்றாண்டுகளாக புளி என்பது இந்திய கலாச்சாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. புளிக்குழம்பு, புளிரசம், மீன் குழம்பு மற்றும் புளி சேர்த்த சட்னி என்று எந்த ஒருநாளும் புளி இன்றி நமது உணவு அமையாது. புளி சேர்த்த உணவுகள் எளிதில் கெடாது என்பதால் பல உணவு பொருட்களை பதப்படுத்துவதற்கு இதனை உபயோகிக்கின்றனர்.
இப்படிப்பட்ட புளியம்பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் நமது உடல் நலத்திற்கு கேடு என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
புளியில் உள்ள சத்துக்கள்
புளியில் விட்டமின் பி1 மற்றும் விட்டமின் பி3, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளிட்டவை இருக்கின்றன. புளி நமது மூளையின் செயல் திறனை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. ஆனால், புளியில் அமிலத்தன்மை கூடுதலாக இருக்கிறது என்பதால் இதை நீங்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது ஆசிட் ரிஃப்ளெக்ஸ் போற பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும்.

பற்களை பாதிக்கும்
அமிலத்தன்மை கொண்ட புளியானது நமது பற்களில் உள்ள ஈறுகளை பாதிக்கத் தொடங்கும். நம் பற்களுக்கு பாதுகாப்பு மண்டலமாக இருப்பது இந்த ஈறுகள் தான். ஆனால், ஈறுகள் பாதிக்கப்படும்போது பற்களும் வலுவிழக்க தொடங்கும். நாளடைவில் பற்கள் மிகுந்த சேதமடையும். பல் கூச்சம் இருப்பவர்கள் புளியங்காயை நினைத்து கூட பார்க்கக் கூடாது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.