இந்த நிலையில் பேட்டிங் குறித்து கேள்வி எழுப்ப பும்ரா சரியான ஆள் இல்லை என்பதைப் போல கருத்து தெரிவித்தார் பத்திரிகையாளர். இதற்கு சற்றும் தயங்காத பும்ரா, “நீங்கள் என் பேட்டிங் திறமையை கேள்வி கேட்கிறீர்களா? கூகுளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன் அடித்த வீரர் யார் என தேடிப்பாருங்கள்” என பதிலளித்து சிரித்தார்.
நகைச்சுவையாக இதைக் கூறிவிட்டு, “நாங்கள் ஒருவரை ஒருவர் கைக்காட்டும் அணி அல்ல” எனக் கூறினார்.
பும்ரா 2022ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 9 விக்கெட்டுகள் இழந்திருந்த நேரத்தில் பும்ரா ஒரே ஓவரில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸ்கள் அடித்தார். நோ பால், சிங்கிள் மற்றும் எக்ஸ்ட்ராஸ் உடன் அந்த ஓவரில் 35 ரன்கள் வந்தது. இது உலக சாதனை என்பது குறிடத்தக்கது.
நடைபெற்றுவரும் போட்டியில் இந்தியாவின் முக்கியமான பேட்ஸ்மேன்களான ஜெய்ஸ்வால், கில், விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்துள்ளனர். கே.எல்.ராகுல் மட்டும் தனியாக போராடி வருகிறார்.