போடியம் பொசிஷன்களுக்கு மட்டுமல்ல, கடைசிக் கட்டத்தில் ஏழாம் இடத்துக்கும் கூட பெரும் போட்டி நிலவியது. நடப்பு சாம்பியன் வெர்ஸ்டப்பன் உடன் கடைசி சில லேப்களில் அட்டகாசமான சண்டை செய்தார் மிக் ஷூமேக்கர். இந்த ரேஸில்தான் தன் முதல் ஃபார்முலா 1 புள்ளிகளைப் பதிவு செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது. எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் சந்தோஷமாக எட்டாவது இடத்தோடு திருப்திப்பட்டிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. ஆக்ரோஷமான வெர்ஸ்டப்பனோடு ஆக்ரோஷமான சண்டை செய்தார். கடைசி லேப்பின் கடைசி திருப்பம்வரை போட்டியிட்ட அவரால், நடப்பு சாம்பியனை முந்த முடியவில்லை. இருந்தாலும் தன் அட்டகாசமான டிரைவிங்கால் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார் மிக். தகுதிச் சுற்றில் பத்தாம் இடம் பிடித்த நிகோலஸ் லடிஃபி, இந்த சீசனில் தன் முதல் புள்ளிகளைப் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மழை இல்லையே! இருந்தாலும் சிறப்பாகச் செயல்பட்ட அவர் 12-வது இடம் பிடித்தார்.
புள்ளிப் பட்டியல் – டிரைவர்கள் சாம்பியன்ஷிப்
1. மேக்ஸ் வெர்ஸ்டப்பன் – 181
2. செர்ஜியோ பெரஸ் – 147
3. சார்ல் லெக்லர்க் – 138
4. கார்லோஸ் சைன்ஸ் – 127
5. ஜார்ஜ் ரஸல் – 111
6. லூயிஸ் ஹாமில்டன் – 93
7. லாண்டோ நாரிஸ் – 58
8. வால்ட்டேரி போட்டாஸ் – 46
9. எஸ்டபன் ஓகான் – 39
10. ஃபெர்னாண்டோ அலோன்சோ – 28
11. பியர் கேஸ்லி – 16
12. கெவின் மேக்னசன் – 16
13. செபாஸ்டியன் வெட்டல் – 15
14. டேனியல் ரிக்கார்டோ – 15
15. யூகி சுனோடா – 11
16. ஜோ குவான்யூ – 5
17. மிக் ஷூமேக்கர் – 4
18. அலெக்ஸ் ஆல்பான் – 3
19. லான்ஸ் ஸ்டிரோல் – 3
20. நிகோலஸ் லடிஃபி – 0
21. நிகோ ஹல்கென்பெர்க் – 0