ஊறுகாய் என்பது ஒரு இயற்கையான ஃபெர்மென்ட் செய்யப்பட்ட உணவு வகையைச் சேர்ந்தது. எனவே ஊறுகாயில் வைட்டமின், மினரல் மட்டுமல்லாமல் நுண் ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். சமீப காலமாகப் பூண்டு ஊறுகாய் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பூண்டு ஊறுகாயில் இருக்கும் நன்மைகள் பற்றிப் பார்க்கலாம்.
பொதுவாகவே பூண்டுக்கு பல்வேறு நற்குணங்கள் உள்ளன. பூண்டில் இருக்கும் கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் செரிமான கோளாறு சரி செய்வதில் இருந்து கொலஸ்ட்ரால் குறைப்பது வரை உதவியாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் பூண்டு ஒரு நபரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். பல 100 ஆண்டுகளாக இந்திய சமையலில் பூண்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Read More : வீட்டிலேயே டோமினோஸ் மாதிரி ஓரிகனோ மசாலாவை தயாரிப்பது எப்படி?
பூண்டு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:
கார்டியோவாஸ்குலர் என்று சொல்லப்படும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் பூண்டு மிகப் பெரிய பங்கை வகிக்கிறது. பூண்டில் இருக்கும் பண்புகள் மற்றும் ஊட்டச்சத்துகள் கொலஸ்ட்ரால் மட்டுமல்லாமல் கொழுப்பைக் குறைக்கிறது. மேலும் இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ரத்த ஓட்டத்தில் இருக்கும், ரத்த நாளங்களில் இருக்கும் அடைப்புகள், மற்றும் பிரச்சனைகளையும் தீர்க்கிறது.
இரும்புச் சத்தை முழுவதுமாக உடல் பயன்படுத்த உதவுகிறது:
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டாலும் அவை முழுவதுமாக உடலால் கிரகித்துக் கொள்ள முடியாமல் போகலாம். உதாரணமாக இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டாலும், வைட்டமின் சி உடலிலிருந்தால் தான் இரும்புச்சத்தை உடலால் ஏற்றுக்கொள்ள முடியும். உங்கள் உடல் இரும்புச்சத்தை முழுமையாகப் பயன்படுத்தப் பூண்டு உதவுகிறது. இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்து உடலில் ரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் ஓட்டம் தடைப்பட்டு தீவிரமான பாதிப்புகள் ஏற்படும். பூண்டைச் சாப்பிடும் பொழுது இந்த பிரச்சனைகளைத் தவிர்த்து உடல் நீங்கள் இரும்புச் சத்தை எளிதில் கிரகித்துக்கொள்ள உதவுகிறது.

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது:
பூண்டில் இருக்கும் மிகப் பெரிய நன்மை, இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது தான். பூண்டில் ஆன்டி பாக்டீரியா, ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி ஃபங்கல் என்று அனைத்து விதமான நுண் கிருமிகளை எதிர்க்கும் தன்மை உள்ளது. எனவே தொடர்ந்து உணவில் பூண்டு சேர்த்து வருபவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
கேன்சரை தடுக்கும் ஆற்றல்:
பூண்டில் இருக்கும் ஆர்கனோ-ஸல்ஃபர் என்ற காம்பவுண்ட், குறிப்பிட்ட புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
மூட்டு வாதத்துக்குத் தடுப்பும், நிவாரணமும்:
வாதம் ஏற்படாமல் தடுக்கும் பண்பு பூண்டில் உள்ளது. இதனால் மூட்டு வலி மற்றும் வாதம் ஏற்படாமல் தடுக்கவும், வாதத்தால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கவும் உதவுகிறது
இவ்வளவு நன்மைகள் இருக்கும் பூண்டை, நீண்ட நாள் பயன்படுத்தக்கூடிய வகையில் இன்ஸ்டன்ட் ஊறுகாய் ரெசிபி செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
1 கிலோ – பூண்டு
2-3 கப் – தண்ணீர் (வேக வைக்க)
4 டீஸ்பூன் – மஞ்சள் தூள்
8 டீஸ்பூன் – சிவப்பு மிளகாய்த் தூள்
½ டீஸ்பூன் – வறுத்த வெந்தயப் பொடி
உப்பு – தேவையான அளவு
3 – எலுமிச்சை
1 கப் – கடுகு எண்ணெய் / நல்லெண்ணெய்
செய்முறை:
பூண்டைத் தோல் நீக்கி, ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். வேகவைத்த பூண்டைப் பெரிய பாத்திரத்தில் மாற்றி, ஒவ்வொன்றாக அனைத்து மசாலா பொருட்களையும் சேர்க்கவும். பின்னர், கடாயில் எண்ணெய்யைச் சூடு செய்து, கடுகு தாளித்துப் பொரிந்தவுடன், பூண்டு, மசாலா கலவையில் சேர்க்கவும். நன்றாகக் கலந்து, ஓரிரு மணிநேரம் ஊறும் படி வைக்கவும். இன்ஸ்டன்ட் பூண்டு ஊறுகாய் தயார். இதைக் குளிர்சாதன பேட்டியில் வைத்து 3 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.