கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கோரி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே பனைமரத்தில் ஏறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கி அருந்தினார் இன்று.
நாதக”வின் உழவர் பாசறை சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்திற்குப் பிறகு பேசியிருக்கும் சீமான், “சீமான் ‘கள்’ விஷம் என்கிறார்கள்; டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் Beer, Brandy, Whiskey எல்லாம் மிளகு ரசமா? என்று கேட்க தோன்றுகிறது இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் கள் இறக்க தடை இல்லாதபோது, தமிழ்நாட்டில் மட்டும் ஏன் தடை?; தமிழ்நாட்டை ஆள்பவர்களுக்கு சாராய ஆலை கணக்கில்லாமல் உள்ளதுதான் காரணம்.

முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு
தைப்பூசத்திற்கு முருகனுக்கு தமிழில் குடமுழுக்குச் செய்ய வேண்டும் என்று சொன்னேன். ஆனால், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அதைச் செய்யமாட்டார். ஏனென்றால் அவரின் தாய்மொழி அது அல்ல.