BCCI Imposes Two-year Ban On Journalist Boria Majumdar For Threatening Wriddhiman Saha – News18 Tamil

Share

விருத்திமான் சாஹாவை மிரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்ட பத்திரிகையாளர் போரியா மஜும்தாருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இரண்டு ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

ஒரு நேர்காணல் விவகாரத்துக்காக வாட்ஸ்அப் செய்திகள் மூலம் மஜும்தார் தன்னை மிரட்டியதாக சஹா முன்பு குற்றம் சாட்டியிருந்தார். விருத்திமான் சஹாவை மிரட்டியதாக போரியா மஜும்தார் குற்றம்சாட்டப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் பிசிசிஐ அறிக்கை ஒன்றை வெளியிட்டது, இதன் விளைவாக, அந்த பத்திரிகையாளருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்க பிசிசிஐ குழு முடிவு செய்துள்ளது.

இதனை விசாரிக்க பிசிசிஐ ராஜிவ் சுக்லா, அருண் சிங் துமால், பிரப்தேஜ் சிங் பாட்டியா ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்தது. அதாவது பத்திரிகையாளர் போரியா மஜும்தார் அனுப்பிய செய்திகள் மிரட்டல் தொனியில் இருந்ததா என்பது விசாரிக்கப்பட்டது. இதனையடுத்து பத்திரிகையாளர் மஜூம்தார் சஹாவை மிரட்டியது உறுதியானது.

இதனையடுத்து உள்நாட்டு, வெளிநாட்டு கிரிக்கெட் எதற்கும் அவருக்கு 2 ஆண்டுகளுக்கு அனுமதி கிடையாது. அதே போல் பதிவு செய்யப்பட்ட எந்த ஒரு இந்திய வீரரிடமும் இவர் 2 ஆண்டுகளுக்குப் பேட்டி எடுக்கக் கூடாது.

மூன்றாவதாக பிசிசிஐ அல்லது அதன் கூட்டமைப்புடன் இணைந்த எந்த ஒரு உறுப்பினர் சங்கங்களையும் சார்ந்த கிரிக்கெட் வசதிகளையும் இவர் அணுக முடியாது. இவ்வாறு இவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com