கிரேடு A-வில் ஹர்திக் பாண்டியா, அஷ்வின், முகமது ஷமி, ரிஷப் பண்ட், அக்ஸர் பட்டேல் ஆகியோர் ரூ.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் கிரேட் C-ல் 1 கோடியில் இருந்த ஹர்திக் பாண்டியா, டபுள் புரொமோஷன் பெற்று A கிரேடு என ரூ.5 கோடிக்கு உயர்ந்துள்ளார். அக்ஸர் பட்டேலும் B கிரேடிலிருந்து A கிரேடுக்கு உயர்ந்துள்ளார்.
கிரேடு B பிரிவில் புஜாரா, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ், சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் ஆகியோர் ரூ.3 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சூர்யகுமார் C கிரேடிலிருந்து B கிரேடுக்கு மாறி, ரூ.1 கோடியிலிருந்து ரூ.3 கோடி சம்பளத்துக்கு உயர்ந்துள்ளார். கிரேடு A விலிருந்த கே.எல்.ராகுல் B கிரேடுக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவரின் சமீபத்திய மோசமான ஆட்டங்கள் இதற்கான காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இவர்கள் தவிர இஷான் கிஷன், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பரத் ஆகியோர் கிரேட் C பிரிவில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்பட்டியலில் ஏற்கனவே இருந்த ஷிகர் தவான், உமேஷ், யுவேந்திர சலால், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் எந்தவித மாற்றமின்றி நீடிக்கின்றனர். ஆனால் ஷர்துல் தாக்கூர் மட்டும் B-யிலிருந்து C கிரேடுக்குத் தள்ளப்பட்டுள்ளார். இவர்களுக்கு ஒரு கோடி சம்பளம் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல புவனேஷ்வர் குமார், மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, விருத்திமான் சாஹா, தீபக் சஹார் ஆகியோர் சம்பளப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர்.