கிச்சன் டாஸ்க் பஞ்சாயத்து, நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க், பெஸ்ட் மற்றும் வொர்ஸ்ட் ஃபர்பார்மர் தேர்வு என்று இந்த எபிசோடு சற்று பரபரப்பாக நகர்ந்தது நல்ல விஷயம். வர்ஷினி மற்றும் ராணவ்வை சுமாரான போட்டியாளர் என்று பலரும் பழிசொன்னது ஏற்கத்தக்கதல்ல. இந்த வாரத்தில் அவர்களிடம் முன்னேற்றம் தெரிகிறது. சீக்ரெட் டாஸ்க் பற்றி பிக் பாஸ் இன்னமும் பொதுவில் வெளியிடவில்லை. வீக்கெண்ட் சுவாரசியத்திற்காக வைத்திருக்கிறார்கள் போல.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 40
ஆண்களிடம் மளிகைப் பொருட்களின் இருப்பு குறைவாக இருக்கிறது. ஏனெனில் அவர்கள் சம்பாதித்ததே குறைவுதான். எனவே ஹாஸ்டல் மாணவர்கள் மாதிரி கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார்கள். “அரிசி ரொம்ப கம்மியா இருக்கு” என்று கிச்சன் இன்சார்ஜ் தீபக் கவலைப்பட்டுச் சொல்ல “ஒரு வேளை கஞ்சியா வெச்சு சமாளிச்சிடலாம்” என்று ஸ்போர்ட்டிவ்வாக சொல்லிக் கொண்டிருந்தார் முத்து. ‘ஒவ்வொரு அரிசியாக சாப்பிட்டால் ஒரு வாரத்திற்கு தாங்கலாம்’ என்கிற ரேஞ்சில் பரிதாபமான நிலைமையில் இருக்கிறது, பாய்ஸ் டீம்.