BBL: சென்னை சேப்பாக்கத்தில் பிக்பேஷ் தொடர்?- ஆஸ்திரேலியாவின் திட்டம் என்ன?|Big Bash league in Chepauk, Chennai? What is Australia’s plan regarding BBL

Share

ஐபிஎல் லீக் போன்று ஆஸ்திரேலியாவில் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட T20 லீக் தொடர் பிக் பேஷ்.

ஐபிஎல் தொடருக்கு அடுத்தப்படியாக ரசிகர்களால் ரசிகப்படும் தொடராகவும் இது இருக்கிறது.

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், சிட்னி சிக்ஸர்ஸ், பிரிஸ்பேன் ஹீட், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி தண்டர், மெல்போர்ன் ரெனிகேட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் என மொத்தம் 8 அணிகள் இந்தத் தொடரில் விளையாடி வருகின்றன.

பிக் பேஷ் தொடர்

பிக் பேஷ் தொடர்

சமீபத்தில் நடைபெற்று முடிந்தத் தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில் 2026- 2027 ஆம் ஆண்டிற்கான பிக் பேஷ் தொடரின் முதல் போட்டியை இந்தியாவில் நடத்துவது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகி வருகிறது.

குறிப்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் வணிக செயல்பாடு தலைமை அதிகாரி உள்ளிட்ட சிலர் இந்தியா வந்து, சென்னையில் தொடக்கப் போட்டியை நடத்துவதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் பிக்பேஷ் தொடருக்கான பார்வையாளர்களை அதிகரிக்கும் விதத்தில் இந்த முன்னெடுப்பை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் செய்ய நினைப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இந்தியா ஆடாத போட்டிகளிலும் சென்னையில் கிரிக்கெட் ரசிகர்கள் விரும்பி மைதானம் வந்து போட்டியை ரசிக்கிறார்கள். இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகத்தின் பரிசீலனையில் சென்னை சேப்பாக்கம் முன்னணியில் உள்ளதாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com