BazzBall-ஐ பஞ்சராக்கிய தென்னாப்பிரிக்கா; கேம் பிளானை மாற்றுமா மெக்கல்லம் – ஸ்டோக்ஸ் இணை? | South Africa damages England’s famous BazzBall strategy

Share

இவ்வளவு எதிர்க் கருத்துகள் கிளம்பக் காரணம், இங்கிலாந்து வென்ற அந்த நான்கு போட்டிகளும் பயணித்திருந்த பாதைதான். ‘நிபந்தனைகளுக்கு உட்பட்டதுதான் BazzBall-ம்’ என்பதனை அதுதான் புலப்பட வைத்திருந்தது.

பாரதியார் கேட்ட ‘வேண்டும்’ பட்டியல் போல், இதற்குத் தேவையான விதிமுறைகளும், நிபந்தனைகளும் நிரம்பவே உண்டு…

“ஃப்ளாட் டிராக் வேண்டும் – அதிலும்

சேஸ் செய்ய வேண்டும்,

வேகத்தில் அச்சுறுத்தாத

எதிரணி பெளலர்கள் வேண்டும்,

ஓப்பனர்களும், டெய்ல் எண்டர்களும் சொதப்புவார்கள் என்பதால்,

மத்திய வரிசை,

எதையும் எதிர்கொள்ள வேண்டும்…”

என இவை எல்லாம் சேர்ந்துதான் வெற்றியைக் கடந்த நான்கு போட்டிகளிலும் உறுதி செய்தன. ஆனால், தென்னாப்பிரிக்காவுடனான முதல் போட்டியே அவர்களது அந்த நிகழ்ச்சி நிரலிலிருந்து மாறிப் பயணித்து, அவர்களைக் குழியில் தள்ளியிருக்கிறது.

ENG vs SA

ENG vs SA
Kirsty Wigglesworth

“Paper over the cracks” என்பது இங்கிலாந்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சொற்றொடர். இதற்குத் தவறுகள் வெளியே தெரியாமல் மறைக்கப்படுவது என்பது பொருள். நியூசிலாந்து, இந்தியாவுக்கு எதிரான வெற்றிகள் மிகப் பெரியவைதான், சிறப்பானவைதான்; ஆனாலும் அந்த வெற்றிகள் தந்த கண் கூசும் வெளிச்சத்தில் அவர்களது குறைகள் மீது இருள் படிந்து இருந்தது என்பதே உண்மை. அந்தக் குறைகளின் மீதே குதிரைச் சவாரி செய்துதான் தென்னாப்பிரிக்கா தற்போதைய வெற்றியை எய்தியுள்ளது.

அதுவும் சாதாரண வெற்றி இல்லை, 2015-ம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்து, தனது மண்ணில் வைத்து எந்த டெஸ்ட் போட்டியையும் இன்னிங்ஸ் கணக்கில் இழந்தது இல்லை. குறிப்பாக லார்ட்ஸ் மைதானத்தில் 2003-ம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவால் கிடைத்த தோல்விக்குப் பின், அந்த மைதானத்தில் இன்னிங்ஸ் தோல்வி என்பது அவர்களது டிராக் ரெக்கார்டுகளிலேயே இல்லாத ஒன்று. எனவே, இது இங்கிலாந்து சற்றும் எதிர்பாராதது.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com