Aval Kitchen – 01 January 2020 – பிரெட் ஸ்பெஷல்|Different variety of bread recipes

Share

தேவையானவை – ஸ்டஃபிங் செய்ய:

  • தேங்காய்த் துருவல் – கால் கப்

  • ஃபுட் கலர் (க்ரீன்) – சிறிதளவு

  • நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

  • சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்

  • பாதாம், முந்திரி (நறுக்கியது) – சிறிதளவு

பால்ஸ் செய்ய:

  • பிரெட் துண்டுகள் – 6

  • பால் – 3 டேபிள்ஸ்பூன்

  • சர்க்கரைப் பாகு செய்ய:

  • சர்க்கரை – கால் கப்

  • தண்ணீர் – 3 டேபிள்ஸ்பூன்

  • ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்

பொரிக்க:

பிரெட் பால்ஸ்

பிரெட் பால்ஸ்

செய்முறை:

ஒரு வாணலியில் நெய் சேர்த்து பாதாம், முந்திரியை வறுத்துக்கொள்ளவும். அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்து ஃபுட் கலர், சர்க்கரை சேர்த்து வதக்கினால் ஸ்டஃபிங் ரெடி.

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்துக் கலந்துவிடவும். சர்க்கரை கரைந்து ஒரு கம்பி பதம் வந்தவுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்துவிடவும். சர்க்கரைப் பாகு தயார். பிரெட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி எடுத்து, பின்னர் அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும். ஒரு பவுலில் அரைத்த பிரெட்டைச் சேர்த்து, அதனுடன் பால் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். இந்த மாவை உருண்டைகளாக்கி அதனுள் தயாரித்த ஸ்டஃபிங் வைத்து நன்கு உருட்டிக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி தயார் செய்த உருண்டைகளை மிதமான சூட்டில் பொன்னிறமாகப் பொரித்துக்கொள்ளவும். பொரித்த உருண்டைகளை இளம் சூட்டில் இருக்கும் சர்க்கரைப் பாகில் நன்றாகப் புரட்டி எடுத்தால், சுவையான பிரெட் பால்ஸ் தயார்.

30,000 ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் ரொட்டி பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com