சோனியா அளித்த வாய்ப்பை ஏற்க மறுப்பு காங்கிரசில் பிரசாந்த் கிஷோர் சேரவில்லை: சுர்ஜேவாலா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
புதுடெல்லி: பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், காங்கிரசில் சேரவில்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் முடிந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மியிடம் ஆட்சியை பறி கொடுத்தது. இந்தாண்டு இறுதியில் இருந்து குஜராத், இமாச்சல பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, 2024 மக்களவை தேர்தலையும் சந்திக்க வேண்டியுள்ளது. இதனால், கட்சியை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது.இந்நிலையில், கீழ்…