Australia plays 3 T20 games in India in September – complete schedule, இந்தியாவுக்கு வருகிறது ஆஸ்திரேலிய அணி

Share

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடக்கிறது.

ஆஸ்திரேலிய அணி அடுத்து எங்கெல்லாம் பயணம் மேற்கொள்ளவிருக்கிறது என்பதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி அடுத்த ஓர் ஆண்டுக்குள் ஏராளமான டி20, ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. குறிப்பாக உள்நாட்டில் ஜிம்பாப்வே, நியூஸிலாந்து, மே.இ.தீவுகள், இங்கிலாந்து அணிகளுடன் டி20 தொடர்களில் பங்கேற்கிறது. டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடப்பதையடுத்து முன்னாலேயே எல்லா அணிகளுடனும் டி20 தொடரில் ஆடுகிறது ஆஸ்திரேலியா.

செப்டம்பர் மாதம் இந்தியா பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதன்பின் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

ஆஸ்திரேலிய அணியின் சுற்றுப்பயண விவரம் இதோ: 2022-23

2022ம் ஆண்டு தொடர்கள்:

ஜூன் -ஜூலை -இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட்

ஆகஸ்.செப்டம்பர்: ஜிம்பாப்வே(3ஒருநாள் போட்டி), நியூஸிலாந்து(3ஒருநாள் போட்டி)

செப்டம்பர்: இந்தியாவுடன் 3 டி20 போட்டிகள்

அக்டோபர்: மே.இ.தீவுகள், இங்கிலாந்து அணியுடந் 6 டி20 போட்டிகள்.

அக்-நவம்பர்: டி20 உலகக் கோப்பை

நவம்பர்: இங்கிலாந்துடன் 3ஒருநாள் போட்டித் தொடர்

2022-23 டிசம்பர்- ஜனவரி மே.இ.தீவுகள்- 2டெஸ்ட்,தென் ஆப்பிரிக்கா3டெஸ்ட்,3 ஒருநாள்

2023 தொடர்கள்:

பிப்ரவரி மார்ச்: இந்தியாவுடன் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்

மார்ச்-மே: ஐபிஎல் டி20 தொடர்

ஜூன் ஜூலை: இங்கிலாந்து சென்று ஆஷஸ் டெஸ்ட் தொடர்(5டெஸ்ட்)

ஆகஸ்ட்: தெ.ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் 3டெஸ்ட்

அக்-நவம்பர்: இந்தியாவில் ஒருநாள்போட்டி உலகக் கோப்பை

இந்திய அணி ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் தென் ஆப்பிரிக்காவுடன் இங்கு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரி ஜூன் 9ம் தேதி முதல் 19ம் தேதி வரை ஆடுகிறது.

அதன்பின் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுஅயர்லாந்து அணியுடன் 2-டி20 போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி, அந்தபோட்டிகள் முடிந்தபின் இங்கிலாந்துடன் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. கடந்த ஆண்டு கோவிட் தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்ட கடைசி டெஸ்டில் இந்திய அணி விளையாடுகிறது

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com