பெர்ட் டெஸ்ட் … இந்தியா அபாரம்!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் ஆஸ்திரேலியா 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. முதலில் ஆடிய இந்திய அணி 150 ரன்களில் ஆல் அவுட் ஆன நிலையில், ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா அணி 46 ரன்கள் முன்னிலையுடன் ஆட தொடங்கிய நிலையில் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 62 ரன்களுடனும் ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தற்போது 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி அபார தொடக்கம்!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் ஆஸ்திரேலியா 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. முதலில் ஆடிய இந்திய அணி 150 ரன்களில் ஆல் அவுட் ஆன நிலையில், ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா அணி 46 ரன்கள் முன்னிலையுடன் ஆட தொடங்கிய நிலையில் இரண்டாவது செஷன் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 84 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 34 ரன்களுடனும் ஜெய்ஸ்வால் 42 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
`ஆல் அவுட்’ ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் ஆஸ்திரேலியா 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. முதலில் ஆடிய இந்திய அணி 150 ரன்களில் ஆல் அவுட் ஆன நிலையில், ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா தற்போது 46 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
முதல் பந்திலே விக்கெட்டை தூக்கிய பும்ரா… இந்தியா அசத்தல் தொடக்கம்
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் இரண்டாவது ஓவரை வீசிய கேப்டன் பும்ரா முதல் பந்திலேயே கேரியின் விக்கெட்டை தூக்கி அசத்தல் தொடக்கம் கொடுத்துள்ளார்.
ஒரே நாளில் 17 விக்கெட்டுகள்; முடிவுக்கு வந்த முதல்நாள் ஆட்டம்!
That's Stumps on what was an engrossing Day 1 of the 1st #AUSvIND Test!
7⃣ wickets in the Final Session for #TeamIndia!
4⃣ wickets for Captain Jasprit Bumrah
2⃣ wickets for Mohammed Siraj
1⃣ wicket for debutant Harshit RanaScorecard ▶️ https://t.co/gTqS3UPruo pic.twitter.com/1Mbb6F6B2c
— BCCI (@BCCI) November 22, 2024
முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்குள் சுருண்டு பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி, பவுலிங்கில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்திய அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்டுகளும், சிராஜ் 2 விக்கெட்டுகளும், ஹர்ஷித் ராணா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
52 பந்துகளில் 2 ரன்… நிலைத்து ஆடிய லபுஷேனைத் தூக்கிய சிராஜ்; கம்மின்ஸும் காலி!
முதல் 8 ஓவர்களுக்குள், நாதன் மெக்ஸ்வீனி, உஸ்மான் கவாஜா, ஸ்மித் ஆகியோரை பும்ரா அவுட்டாக்கிய அடுத்த சில ஓவர்களிலேயே, அதிரடி வீரர் டிராவில் ஹெட்டை கிளீன் போல்டாக்கி வழியனுப்பினார் அறிமுக வீரர் ஹர்ஷித் ராணா. அடுத்து களமிறங்கிய மிட்செல் மார்ஷை சிராஜ் விக்கெட் எடுத்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் லபுஷேன் மட்டும் நிலைத்து ஆடிக்கொண்டிருந்தார்.

51 பந்துகளில் வெறும் 2 ரன்களை மட்டுமே எடுத்திருந்த லபுஷேன், 52-வது பந்தில் சிராஜிடம் எல்.பி.டபிள்யு ஆகி வெளியேறினார். அடுத்துவந்த, கேப்டன் பேட் கம்மின்ஸை கேப்டன் பும்ரா காலி செய்தார். தற்போது, 24.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 59 ரன்களில் இருக்கிறது ஆஸ்திரேலியா.
டாப் ஆர்டரை சரித்த கேப்டன் பும்ரா… 3 விக்கெட்டுகள் இழந்து தடுமாறும் ஆஸ்திரேலியா!
முதல் இன்னிங்ஸில் இந்தியா 150 ரன்களில் சுருண்டதையடுத்து, உஸ்மான் கவாஜாவும், நாதன் மெக்ஸ்வீனியும் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கினர். ஆனால், தொடங்கிய வேகத்திலேயே ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளித்த கேப்டன் பும்ரா, அறிமுக வீரர் நாதன் மெக்ஸ்வீனியை 10 ரன்களில் வெளியேற்றினார். அவரைத் தொடர்ந்து, கவாஜாவை 8 ரன்களில் அவுட்டாக்கிய பும்ரா, ஸ்டீவ் ஸ்மித்தை முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யு முறையில் அவுட்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பினார். 8 ஓவர்கள் முடிவில் 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து ஆஸ்திரேலியா தடுமாறி வருகிறது. மார்னஸ் லபுஷேனும், டிராவிஸ் ஹெட்டும் களத்தில் இருக்கின்றனர்.
150 ரன்களில் ஆல் அவுட்… ஆஸி வேகப்பந்துவீச்சில் சுருண்ட இந்தியா!
முதல் செஷனுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணி, 49.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து சரியாக 150 ரன்களில் சுருண்டது. இந்தியா சார்பில் அறிமுக ஆல்ரவுண்டர் 59 பந்துகளில் 41 ரன்கள் அடித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். மேலும், இவர் உட்பட கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், துருவ் ஜோரெல் ஆகியோரைத் தவிர வெறும் யாரும் ஒற்றை இலக்க ரன் கூட அடிக்கவில்லை. ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ், ஸ்டார்க், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுக்க, அதிகபட்சமாக ஹேசில்வுட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
மீண்டும் ஏமாற்றிய கோலி… 2 பேர் டக் அவுட்; 3 விக்கெட்டுகள் இழந்து இந்தியா தடுமாற்றம்!
டாஸ் வென்று பேட்டிங் தேர்வுசெய்த இந்திய அணிக்கு ஜெய்ஸ்வாலும், கே.எல். ராகுலும் ஓப்பனர்களாகக் களமிறங்கினர். வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான இந்த கிரவுண்டில், மூன்றாவது ஓவரின் முதல் பந்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சியைத் தந்தார் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க். ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்து ஜெய்ஸ்வாலின் பெட்டில் எட்ஜ் வாங்கி நாதன் மெக்ஸ்வீனி கைகளில் தஞ்சமடைந்தது. ஜெய்ஸ்வால் 8 பந்துகளில் ரன் கணக்கைத் தொடங்காமல் பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மற்றொரு இடதுகை பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல், பந்தைச் சரியாக பேட்டில் எதிர்கொள்ளவே சற்று தடுமாறினார்.

22 பந்துகளாக ரன் ஏதும் அடிக்காமல் களத்தில் நின்றுகொண்டிருந்த படிக்கல், 23-வது பந்தில் ஜெய்ஸ்வாலைப் போலவே எட்ஜ் வாங்கி ஹேசில்வுட் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். 15 ஓவர்கள் முடிவில், இந்தியா இரண்டு விக்கெட் இழப்பு 21 ரன்கள் எடுத்தது. கே.எல். ராகுல் 52 பந்துகளில் 14 ரன்களுடனும், விராட் கோலி 8 பந்துகளில் 1 ரன்னுடனும் களத்தில் நின்றனர். இரண்டு அனுபவ வீரர்கள் இந்திய அணியை முன்னோக்கி அழைத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்த்த வேளையில், விராட் கோலியை 5 ரன்களில் காலி செய்தார் ஹேசில்வுட். 12 பந்துகளில் 5 ரன்கள் அடித்த விராட் கோலி மீண்டும் ஒருமுறை ஏமாற்றமளித்து பெவிலியன் பக்கம் சென்றார். தற்போது, கே.எல்.ராகுலுடன் ரிஷப் பண்ட் கைகோர்த்திருக்கிறார்.
பும்ரா:
2018-ல் நாங்கள் இங்கு ஒரு டெஸ்ட் போட்டியை விளையாடினோம். அதனால், எங்களுக்கு என்ன தேவை என்பது எங்களுக்குத் தெரியும். களம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமா இருக்கிறது. நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். பந்துவீச்சில், நாங்கள் 4 வேகப்பந்துவீச்சளர்கள் மற்றும் ஒரேயொரு ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தருடன் களமிறங்குகிறோம்.
பேட் கம்மின்ஸ்:
வெற்றிவாய்ப்பில் இருவரும் சம அளவில் இருக்கிறோம். எப்படியிருந்தாலும் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்தியா – ஆஸ்திரேலியா விளையாடும் எந்த வடிவிலான போட்டியாக இருந்தாலும் அது கடும் போட்டியாகத் தெரிகிறது. எங்கள் அணியில் டாப் ஆர்டரில், நாதன் மெக்ஸ்வீனி அறிமுகமாகிறார்.
அணிகளின் விபரம்:
இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு:
இந்திய அணியில் புதிய வேகப்பந்துவீச்சாளர் அறிமுகம்!
இந்தியா பிளேயிங் லெவன்: கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ரிஷப் பந்த், துருவ் ஜூரல், நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
ஆஸ்திரேலிய அணியில் வார்னர் இடத்தில் இளம் வீரர் அறிமுகம்!
ஆஸ்திரேலியா பிளெயிங் 11:
உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஜோஷ் ஹேசில்வுட்
டாஸ் வென்ற இந்திய அணி
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் தொடங்க உள்ளது. முதலாவது போட்டியில் டாஸ் வந்த இந்திய அணியின் கேப்டன் பும்ரா, பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இந்திய அணி சார்பில் நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா ஆகியோர் இந்த டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்க உள்ளனர். இந்த போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் களமிறங்குகிறார்.அஸ்வின் இடம்பெறவில்லை.

பார்டர்- கவாஸ்கர் தொடர்
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இதையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரான பார்டர் – கவாஸ்கர் தொடரில் விளையாட இருக்கிறது.

5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் இன்று, அதாவது நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. கடைசி போட்டி ஜனவரி 3 ஆம் தேதி சிட்னியில் நடைபெறுகிறது.
இந்திய அணி வீரர்கள்:
ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல் , சர்ஃபராஸ் கான், விராட் கோலி, பிரசித் கிருஷ்ணா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, ரிஷப் பண்ட் , கே எல் ராகுல், ஹர்ஷித் ராணா, அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், நிதிஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பார்டர்- கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருக்கின்றனர்.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள்
பேட் கம்மின்ஸ் , ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷேன், நாதன் லியோன், மிட்செல் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருக்கின்றனர்.
கேப்டன்கள்
ரோஹித் சர்மா இந்தத் தொடரில் இந்திய அணியை வழிநடத்துகிறார். ஆனால் ரோஹித்திற்கு குழந்தை பிறந்திருப்பதால் முதல் போட்டியில் மட்டும் அவர் பங்கேற்க மாட்டார். அவருக்கு பதில் முதல் போட்டியில் பும்ரா இந்திய அணியை வழிநடத்துகிறார். ஆஸ்திரேலிய அணியை பேட் கம்மின்ஸ் வழிநடத்துகிறார்.
இந்திய அணிக்கு இருக்கும் சவால்:
இந்திய அணி சுமார் 2 மாத காலம் ஆஸ்திரேலியாவில் தங்கி இருக்கும். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி குறைந்தது 4 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியை டிரா செய்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க முடியும். ஒரு வேளை தொடரை இழந்தாலோ மிக குறைந்த போட்டிகளில் வெற்றி பெற்றாலோ இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படும்.
எதில் பார்க்கலாம்?
2024 – 2025 ஆம் ஆண்டிற்கான பார்டர்- கவாஸ்கர் தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைக்காட்சி சேனல்களில் நேரலையில் பார்க்கலாம். அதேபோல டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டிகளை பார்க்கலாம்.

கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த 2 பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர்களையும் இந்திய அணி வென்றிருப்பதால் இந்த தொடர் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
