பார்டர் கவாஸ்கர் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக அந்தத் தொடரின் பில்டப்புக்காக பல ஆஸ்திரேலிய ஊடகங்களும் கோலியைப் பற்றி புகழ்ந்து ஸ்டோரிக்களை வெளியிட்டிருந்தனர். ஆனால், தொடர் தொடங்கி நடக்க நடக்க இந்த நிலை அப்படியே மாறியது. விமான நிலையத்தில் தன்னுடைய குழந்தைகளை அனுமதியின்றி படம் பிடித்ததற்காக கோலி ஆஸ்திரேலிய ஊடகத்தினர் சிலருக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதையும் சில ஊடகங்கள் பெரிதுப்படுத்தியிருந்தன. கோலி மட்டுமில்லை கிடைக்கிற கேப்பிலெல்லாம் இந்திய வீரர்களுக்கு அழுத்தம் ஏற்றும் வகையில்தான் ஆஸ்திரேலிய ஊடகங்கள் செயல்பட்டு வந்தன. பத்திரிகையாளர் சந்திப்பில் ஜடேஜா ஆங்கிலத்தில் பேசவில்லை என ஒன்றாகக் கூடி இந்திய அணியை அடித்தார்கள். பும்ராவை மித வேகப்பந்துவீச்சாளர் என குறிப்பிட்டு கேள்வி எழுப்பினர்.
Aus v Ind : ‘கோமாளி கோலி’ – கோலியை கடுமையாகச் சாடும் ஆஸ்திரேலிய ஊடகங்கள்; காரணம் என்ன? | Australian News Paper Criticising Kohli
Share