லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தியுள்ளது. இந்த போட்டியின் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை எகிற வைத்தது. இந்தப்போட்டில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், ரோஹித் ஷர்மா களமிறங்கினார். இருவரும் இந்திய அணிக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 5.1 ஓவர்களில் 54 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய ரோஹித் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகள் எடுத்த நிலையில் 28 ரன்களில் விக்கெட்டை பறிக்கொடுத்தார். இதனையடுத்து விராட் கோலி களமிறங்கினார்.
அடுத்த ஓவரிலே ஓப்பனிங் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் 28 ரன்களில் நடையை கட்டினார். இதனையடுத்து சூர்ய குமார் யாதவ் களமிறங்கினார். ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் மட்டையை சுழற்றிய சூர்ய குமார் யாதவ் மீது இந்த போட்டியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இரண்டு பவுண்டரிகளோடு எடுத்த நிலையில் 13 ரன்களில் பெவிலியன் திரும்பினார். சீரான இடைவெளியில் இந்திய அணி விக்கெட்டை இழந்தது.
ரிஷப் பண்ட் 13 ரன்களிலும், ஹர்திக் பாண்ட்யா டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். விரோட் கோலி மட்டும் போராட்டிக்கொண்டிருந்தார். தீபக் ஹூடா கோலிக்கு ஒத்துழைப்பு ரன் ரேட் அதளபாதாளத்துக்கு செல்லாமல் ரன்களை உயர்த்தவும் ஒத்துழைப்பு அளித்தார். இதற்கிடையில் விராட் கோலி அரைச்சதம் அடித்தார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. இந்திய வீரர் விராட் கோலி அதிகபட்சமாக 44 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.