அந்த வரிசையில், தமிழகத்தைச் சேர்ந்த சக வீரர் வாஷிங்டன் சுந்தர், எக்ஸ் தளத்தில் அஷ்வினுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “ஒரு சக வீரர் என்பதைத் தாண்டி, நீங்கள் ஒரு இன்ஸ்பிரேஷன், வழிகாட்டி மற்றும் உண்மையான சாம்பியன். மைதானம், டிரெஸ்ஸிங் ரூமை உங்களுடன் பகிர்ந்ததில் பெருமை. ஒரே மாநிலத்திலிருந்து வந்து, சேப்பாக்கத்தின் ஒரு மூலையில் இருந்து உங்களைப் பார்த்தது முதல் உங்களுக்கெதிராவும், உங்களுடனும் விளையாடி வளர்ந்திருக்கிறேன்.
அந்த ஒவ்வொரு கணமும் எனக்குக் கிடைத்த பாக்கியம். களத்துக்குள்ளேயும், களத்துக்கு வெளியேயும் உங்களிடமிருந்து கற்றுக்கொண்டதை என்றென்றும் என்னுடன் கொண்டுசெல்வேன்.” என்று பதிவிட்டிருக்கிறார்.
அதற்கு, எக்ஸ் தளத்திலேயே அஷ்வின் நடிகர் விஜய்யின் தி கோட் பட பாணியில், “துப்பாக்கிய புடிங்க வாஷி (வாஷிங்க்டன் சுந்தர்).” என்று பதிலளித்திருக்கிறார். அஷ்வினின் கூற்றுப்படி இந்திய அணியில் அவரின் இடத்தை வாஷிங்க்டன் சுந்தரே நிரப்பும் பட்சத்தில் அது தமிழ்நாட்டுக்கும் பெருமையாக அமையும்.