இந்த விபத்தில் 10 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரில் செய்து ஆய்வு மேற்கொண்டார். இந்த விபத்து தொடர்பாக தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் நியூஸ் 18 ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தேடுதல் பணிகள் நடைபெற்று வருகிறது. வனப்பகுதி என்பதால் அதிகம் பேர் மீட்பு பணிகளில் ஈடுபட முடியவில்லை. 14 பேர் ஹெலிகாப்டரில் பயணித்துள்ளனர்.
Also Read : பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து: இன்னும் 3 உடல்களை மீட்க வேண்டியுள்ளது – அமைச்சர் ராமச்சந்திரன்
ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்தின் நிலை குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை. அடர்த்தியான வனப்பகுதி என்பதால் மீட்பு நடவடிக்கை சிரமமாக உள்ளது என்று தெரிவித்தார். ஹெலிகாப்டர் கூடுதலாக 20 அடி மேலே பறந்து விபத்து ஏற்பட்டிருந்தால் அருகில் உள்ள கிராம மக்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்து நடந்தது குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் இன்று மாலை அறிக்கை தாக்கல் செய்கிறார். முதலில், அவர் நேரடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொள்வார் என தகவல்கள் வெளிவந்தன.
Also Read : Live Updates | குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: முப்படை தளபதி பிபின் ராவத் நிலை என்ன?
தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி பாதுகாப்பு அமைச்சர் டெல்லியில் இருந்தவாறே, விபத்து குறித்த நிலவரங்களை பார்வையிடுகிறார். விபத்தில் உயிரிழந்திருப்பது இந்திய முப்படையின் தலைமை தளபதி என்பதால், இந்த சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.