2025 ஜனவரி முதல் மார்ச் வரை, மூன்று மாதங்களாக எனது ஹார்மோன்களைக் கடுமையாகப் பரிசோதித்து என்னுடைய தரவுகளைச் சேகரித்தனர்.
பின், அவ்வாறு சேகரித்த தரவுகளை மற்ற சிஸ்ஜெண்டர் பெண் விளையாட்டு வீரர்களின் தரவுகளோடு நிபுணர்கள் ஒப்பிட்டுப் பார்த்தனர்.
திருநங்கையான எனது சக்தி, வலிமை, உடலின் ஆக்ஸிஜன் அளவு, தசை நிறை மற்றும் நுரையீரல் திறன் ஆகியவை சிஸ்ஜெண்டர் பெண்களது தரவுகளோடு பொருந்துவதைப் பரிசோதனை முடிவுகள் மூலம் கண்டறிந்தனர்.
இந்த முடிவுகளின் அடிப்படையில், பிசிசிஐ மற்றும் ஐசிசி-யுடன் என்னுடன் முறையான உரையாடலைத் தொடங்க வேண்டும்.
மேலும், இதுகுறித்து நிபுணர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்களோடு இணைந்து உரையாடி பயனுள்ள கொள்கைகளை உருவாக்க வேண்டும்.
என்னுடைய இந்த அறிக்கை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருந்து இந்திய கிரிக்கெட்டில் புரட்சியாக மாறலாம் அல்லது மாற்றங்கள் ஏற்படுத்தாமலும் போகலாம்” எனத் தெரிவித்து இருந்தார்.
ஹார்மோன் சிகிச்சைக்கு முன் ஆர்யனாக அறியப்பட்ட அனயா, தனது பாலினத்தை மாற்றிக்கொண்டாலும் கிரிக்கெட் மீதான தனது இலட்சியத்தைக் கைவிடவில்லை.
கிரிக்கெட்டில் சாதிப்பதற்காகவே இத்தகைய முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்.
சர்வதேச அளவில் மகளிர் கிரிக்கெட்டில், திருநங்கை வீராங்கனைகள் பங்கேற்க ஐ.சி.சி தடை விதித்துள்ளது. சமீபத்தில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியமும், திருநங்கைகள் நாட்டின் அனைத்து நிலையிலான மகளிர் கிரிக்கெட்டிலும் பங்கேற்கத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.