`மகாராஜா”வில் வாய்ப்பு கொடுத்த நித்திலனுக்கும், `விடுதலை’யில் வாய்ப்பு கொடுத்த வெற்றிமாறன் சாருக்கும் நன்றி. `வாத்தியார்’ கதாபாத்திரத்தை அவர் எழுதுனதை ரொம்ப ஆச்சர்யமா பார்த்தேன்.
அப்படி வாழ்ந்த மனுஷங்களை, அவங்களுக்கு உள்ள போய் பார்க்க முடிஞ்சதைப் பெரிய வரமா நினைக்கிறேன்” என்று கூறினார்.
இறுதியாக தன்னுடைய பார்வையில் விருது குறித்து பேசிய விஜய் சேதுபதி, “தலைவர்கள், வீட்ல இருக்கிறவங்க நியாபகார்த்தமா வீட்ல போட்டோ வைப்போம். அந்த மாதிரி இந்த விருதை எப்பயாவது பார்க்கும்போது, அந்த படத்தையும், அதுல நடந்த விஷயங்களையும் திரும்பி பார்போன்.
கூத்து பட்டறைல இருக்கும்போது முத்துசாமி சார் அழகா ஒன்னு சொல்லுவாரு, “மனோரதத்துல போய்ட்டு வாங்க-னு”.
எந்த வண்டியில போனாலும் கொஞ்சம் டைம் எடுக்கும். ஆனா மனசுல இருந்து போகும்போது டக்குனு அந்த இடத்துக்கு போயிடுவேன்.
அந்த மாதிரி, மனோரதத்தில் ஏறி உடனே அந்த விஷயத்துக்கு கூட்டிட்டு போக, வீட்ல சொந்தமாக வச்சிருக்கிற சிலைதான் இந்த விருதுன்னு நினைக்கிறேன்.” என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…