Am I a disgrace Like Morgan Said I was? Of Course NOT, Ravichandran Ashwin Hits Back at KKR Captain, அது ஓவர் த்ரோதான் ஏன் ஓடக்கூடாது?- அஸ்வின் தன்னிலை விளக்கம் – News18 Tamil

Share

இது தொடர்பாக அஸ்வின் தன் சமூக ஊடகத்தில் கூறியிருப்பதாவது: “பீல்டர் த்ரோ போடும்போதே நான் ரன் எடுக்கத் தயாராகி விட்டேன், ரிஷப் பந்த் மேல் பந்து பட்டுச் சென்றதை நான் கவனிக்கவில்லை. ஆனால் நான் அதைப்பார்த்திருந்தாலும் ஓடித்தானிருப்பேன். அதற்கு எனக்கு அனுமதி உண்டு. மோர்கன் என்னைப் பார்த்து கேவலம் என்று சொல்லக்கூடிய வகையில் நடந்து கொள்பவனா நான்? இல்லை.

நான் சண்டைப் போட்டேனா? இல்லை. நான் எனக்காக தைரியமாக நின்றேன் இதைத்தான் பெற்றோர்களும் ஆசிரியர்களும் சொல்லிக் கொடுத்துள்ளார்கள். உங்கள் செயலில் உறுதியுடன் இருக்க உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். மோர்கன், சவுதி கிரிக்கெட்டில் எது சரி, எது தவறு என்ற கொள்கையை வைத்துக் கொள்ளட்டும். ஆனால் அதற்காக தார்மீக உரிமை பெற்றவர்களாக இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கு உரிமை கிடையாது.

மேலும் இந்த கூடுதல் ரன் விவகாரத்தை வைத்துக் கொண்டு யார் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று விவாதிப்பது சரியல்ல. பல கிரிக்கெட் வீரர்களுக்கு இது வாழ்க்கை. ஒரு த்ரோவுக்கு கூடுதல் ரன் எடுப்பது சிலருக்கு வாழ்க்கையை தீர்மானிப்பதாக இருக்கலாம். ரன்னர் முனையில் ஒரு கூடுதல் ரன்னுக்காக கிரீசை விட்டு விதிமீறலாக முன்னேறி வருவது சில வீரர்களின் வாழ்க்கையை தகர்க்கலாம்.

ஆகவே 1 கூடுதல் ரன்னை எடுக்காதவர் நல்லவர், ரன்னர் முனையில் பேட்டரை எச்சரித்து விட்டு மன்கடிங் செய்தால் நல்லவர் இல்லையெனில் கெட்டவர் என்று முடிவுகட்ட வேண்டாம். இப்படிச் சொல்லி குழப்பி விடாதீர்கள். இதை வைத்து நல்லவரா, கெட்டவரா என்று முடிவு கட்டி விமர்சிப்பவர்கள் ஏற்கெனவே தங்கள் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பெற்றிருப்பவர்கள்.

உங்கள் முழு ஆற்றலுடன், உங்கள் ஆன்மாவை அர்ப்பணித்து 100% ஆட்டத்தில் பங்களிப்பு செய்யுங்கள், ஆடுங்கள், விதிமுறைக்கு உட்பட்டு ஆடுங்கள். ஆட்டம் முடிந்தவுடன் கைகுலுக்குங்கள். இதுதான் ஒரே ஸ்பிரிட் ஆஃப் த கேம் என்று நான் புரிந்து கொள்கிறேன்” இவ்வாறு கூறினார் அஸ்வின்.

நம் சந்தேகம் என்னவெனில் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டே லஞ்சம், லாவண்யம் ஊழல் போன்றவற்றில் பலரும் ஈடுபடுகின்றனர். சட்டத்தையும் தர்மத்தையும் தங்களுக்கு சாதகமாக தன் சுயமுன்னேற்றத்துக்காகவும் வளைத்துப் பயன்படுத்துகின்றனர். இதை வைத்து நல்லவர் கெட்டவர் என்று முடிவு கட்டாதீர்கள் என்று கூறினால் ஏற்றுக் கொள்ள முடியுமா? கிரிக்கெட்டில் இதெல்லாம் சகஜம் என்பதோடு அஸ்வின் நிறுத்திக் கொள்வதுதான் நலம், இதை ஏதோ வாழ்க்கைப் பாடம் போல் கூறுவது இளைய தலைமுறைக்கு தவறான வழிகாட்டுதலாகி விடாதா என்பதே நம் கேள்வி.

ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com