Afg V Nz: ‘டேபிள் ஃபேன்லாம் யூஸ் பண்ணியும் பயனில்ல’- மழையால் முழுமையாக தடைபட்ட ஆப்கானிஸ்தான் டெஸ்ட் | Afg V Nz match called off created history

Share

இதன் பின்னணியில்தான் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிராக ஆடவிருந்த டெஸ்ட் போட்டி நொய்டாவுக்கு வந்தது. நொய்டாவில் இதற்கு முன் டெஸ்ட் போட்டியெல்லாம் நடந்ததே இல்லை. ஒரு டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கான போதிய வசதிகள் இந்த மைதானத்தில் இல்லை என போட்டிக்கு முன்பாகவே தகவல்கள் வெளியாகியிருந்தது. பிசிசிஐ இந்த டெஸ்ட் போட்டியை நடத்த மொத்தமாக 3 மைதானங்களை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஆப்சனாக கொடுத்திருந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில்தான் போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும் என்ற அடிப்படையில் நொய்டாவை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

ஆனால், மழையின் பாதிப்பால் டாஸ் கூட போடப்படாமல் இந்தப் போட்டி முழுமையாக தடைப்பட்டிருக்கிறது. மைதானத்தில் ஈரப்பதத்தை போக்கும் வசதிகள் எதுவும் நொய்டா மைதானத்தில் இருந்ததாக தெரியவில்லை. மின்விசிறியெல்லாம் வைத்து மைதானத்தின் ஈரப்பதத்தை போக்க முயன்றிருக்கிறார்கள். டெல்லி மற்றும் உத்திரபிரதேச மைதானங்களில் இருந்துதான் ஈரப்பதத்தை உலர வைக்கும் கருவிகளை வாங்கியிருக்கிறார்கள்.

போட்டி தடைப்பட்டதில் ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் கடும் அப்செட் ஆகியிருக்கிறார். அவர் பேசியதாவது, “எங்களுடைய வீரர்கள் கடுமையாக உழைத்திருந்தார்கள். நியூசிலாந்துக்கு எதிராக சவாலை எதிர்கொள்ள தயாராக இருந்தோம். தனிப்பட்ட முறையில் எனக்கு கடும் அதிருப்திதான். மைதானத்தில் செய்யப்பட்டிருந்த வசதிகளும் எங்களுக்கு அதிருப்தியைத்தான் கொடுத்தது.’ என டிராட் கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com